பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 43

எண்ணிக்கை எக்காலத்தும் இருந்ததில்லை. இதை எண்ணும்பொழுது பழங்காலத்திய தமிழக மருத்துவ முறை. பிள்ளைப் பேற்று மருந்து முறை ஆகியவைகளின் பெருமை ஒருவாறு நன்கு விளங்கும்.

குழந்தை வளர்ப்புக்கலை ஒரு தனிக் கலையாகும். இக் கலையைக் கல்லூரி மாணவிகள் அறியார்கள். அதை நன்கு அறிந்து அறிவிப்பவர்கள் நம் நாட்டு மூதாட்டிகளே. நாகரிகப் பெண்மணிகள் அவர்களைக் 'கிழடுகள்' என்பார் கள். நன்கறிந்த பெண்மணிகள் அவர்களைக் கிழட்டுச் செல்வங்கள்' என்பார்கள். 'குழந்தைகளின் அணைப்பை கொண்டிருக்கின்ற தாய்மார்கள், கணவரது அணைப்பி லிருந்து விலகி இருத்தல் வேண்டும். இன்றேல் பால் சுரக்கும் உறுப்பில் காம நீர் சுரந்துவிடும். அது கைப் பிள்ளைகளின் வயிற்றில் செரிக்காது. அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு. மாந்தம் முதலிய நோய்கள் குழந்தை களுக்கு வந்து துன்புறுத்தும்' என்பது இக் கிழட்டுச் செல்வங்களின் கருத்து. இச் செல்வங்கள் இல்லாத விடு...? ? ?

குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்க வைக்கின்ற தமிழகத்தின் தாலாட்டுப் பாடல்கள் சுவையுடையன அப்பாடல்களுக்கு உறங்கவைக்கும் வலிமை மட்டுமின்றி, இசையுணர்வு, சொல்லறிவு, சிறந்த பண்பு, விரிந்த மனம், வீர உணர்ச்சி ஆகியவைகளைக் குழந்தைகளுக்கு ஊட்டும் ஆற்றலும் உண்டு.

சைவ சமயத் தலைவர் ஒருவரை சமண சமயத் தலைவர்கள் நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) தள்ளிப் பூட்டியதாகவும், இந்நேரம் எரிந்து சாம்பலா யிருப்பார் என்று எண்ணித் திறந்து பார்த்தபொழுது, அவர் உயிருடன் மீண்டதாகவும் "நெருப்பு உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/45&oldid=956465" இலிருந்து மீள்விக்கப்பட்டது