பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு ஆனைக்கா 300

யால் நீராட்டித் தூய மலர் தூவி வணங்கிற்று ஒரு யானை என்று பழங்கதை கூறுகின்றது: - -

அந் நாவல் மரத்தில் அமர்ந்த நாதனை வழிபட்டுப் பேறு பெற்ற சோழ மன்னருள் ஒருவன் கோச்செங் கண்ணன். தமிழ் நாட்டில் திருக்கோயில்:கட்டிய மன்னருள் தலைசிறந்தவன் அவனே. மணிகண்டனாகிய ஈசனுக்கு எழுபது மாடக்கோயில் எடுத்தான் அம் மன்னன் என்று பாடியுள்ளார் திருமங்கை ஆழ்வார். திரு ஆனைக்காவிலும் அவன் திருக்கோயில் எடுப்பித்தான்.” -

கோச் செங்கண்ணன் கட்டிய கோயில் நாவற். கோயில் ‘ என்று பெயர் பெற்றது. ஜம்புகேசுரம்’ என்ற வடமொழிப் பெயரும் அதற்கு உண்டு. அவ் ஆலயத்தில் அண்டங்கள் அனைத்தையும் ஈன்ற அம்மையோடு அமர்ந்தருளும் ஈசனைக் கண்குளிரக் கண்டு பூமாலையும் பாமாலையும் சாத்தினர் திருத்தொண்டர்கள். அத்தகைய அழகிய பாமாலைகளில் ஒன்று அகிலாண்ட நாயகி

i_{{{foo, -

அகிலம் எல்லாம் ஈன்ற அம்மையை ஒரு பாகத்தில் வைத்து, கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக் காட்சி தரும் இறைவனைக் கசிந்துருகிப் பாடினார் ஒரு கவிஞர். “அம்மையே அகிலாண்ட நாயகியே என் அனைய அடியார்கள் செய்யும் எண்ணிறந்த பிழைகளைப் பொறுத்து அருள் புரியும் அன்னையாகிய, உன்னை ஒரு பாகத்திலே வைத்த பரமன், மூன்று பிழைக்கு மேல் பொறுக்காத ஒரு மங்கையைத் தன் முடியின்மேல் ஏற்றி வைத்தானே ! இதனால் அன்றோ இவன் பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான்?” என்ற கருத்தை அமைத்து, . --

“அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை அணிஉருப் பாதியில் வைத்தான் தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச் சடைமுடி வைத்தனன், அதனால்