பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திரு ஆனைக்கா

முன்னொரு கால் ஒரு சோழ மன்னன் காவிரி யாற்றிலே உறையூர்த் துறையில் இறங்கி நீராடினான். தண்ணிரில் மூழ்கி எழுந்தான்; கழுத்தில் இருந்த முத்தாரத்தைக் காணவில்லை. ஆற்றில் விழுந்த ஆரத்தை நீரே ஏற்றருளும் என்று ஈசனை வேண்டினான்:

திரு ஆனைக்காவில் உறையும் ஈசனை அன்று காவிரி நீரால் முழுக்காட்டியபொழுது அவர் திருமேனியில் விழுந்தது அம் முத்துமாலை, அரசன் சிவார்ப்பணம் செய்த முத்தாரம் திருமஞ்சனக் குடத்திலே புகுந்து, ஆனைக்காவில் அமர்ந்த பெருமானது திருமேனியைச் சேர்ந்தது என்று எல்லோரும் இன்பவாரியில் மூழ்கினர். இச் செய்தியைத் தேவாரத் திருப்பாசுரம் எடுத்துரைக் கின்றது.

பழங்காலத்தில் வளமார்ந்த பயன்மரச் சோலைகள் ஈசன் உறையும் கோயில்கள் ஆயின. சோழ நாட்டில் உள்ள நெல்லி மரச் சோலை திரு நெல் விக்கா என்றும், குரங்காடும் பழஞ்சோலை குரக்குக்கா என்றும் தேவாரத்தில் குறிக்கப்பெற்றுள்ளன. காவிரிக்கரையில் அமைந்த குரங்குச் சோலையை ‘ குரக்கினம் குதி கொள்ளும் குரக்குக்கா” என்று தேவாரம் பாடிற்று.

கா என்பது சோலை. காவிரியாற்றின் நடுவே யானை திரியும் நெடுஞ் சோலையொன்று அந்நாளில் நின்றது. அது ஆனைக்கா என்று பெயர் பெற்றது. அங்கு ஒரு நாவல் மரத்திலே வெளிப்பட்ட ஈசனை நாள்தோறும் துதிக்கை