பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தஞ்சை மாநகரம்

காவேரியின் கருணையால் நஞ்சை வளம் பெற்றது தஞ்சை நாடு. பஞ்சம் என்பதறியாத அத்திருநாட்டில் தஞ்சை மாநகரம் தழைத்தோங்கி வளர்கின்றது. அஞ்சன வண்ணனாகிய திருமால் அந்நகரில் அமர்ந்து அருள் புரிகின்றான்.

“ வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை

மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகான் உய்ய நான்கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம் “

என்று தஞ்சை மாமணிக் கோயிலை நெஞ்சாரப் போற்றினார் திருமங்கை மன்னன். செஞ்சடைப் பெருமானாகிய ஈசனும் தஞ்சையம்பதியிலே கோயில் கொண்டருளினான். அக்கோயிலைத் தஞ்சைத் தளிக்குளம்’ என்று தேவாரம் பாடிற்று. r

இத்தகைய தஞ்சை மாநகரின் பெருமை யெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டான் இராசராசன் என்ற சோழன்,அவன் மன்னர் மன்னன்; மாநில வேந்தன்; வெற்றி மேல் வெற்றி பெற்ற கொற்றவன்; கடல் சூழ்ந்த இலங்கையையும் வென்று அரசாண்ட இணையற்ற வீரன். அம்மன்னன் தஞ்சையைச் சோழ நாட்டின் தலைநகர் ஆக்கினான். அதற்கு அருமையும் பெருமையும் அளித்தான். முத்தமிழும் அங்கு முழங்கக் கண்டு களித்தான். தஞ்சையம்பதியில் அம்மன்னன் எடுத்த தனிப் பெருங்