பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்திமுற்றம் 118

தென்குமரித் துறையிலே வயிறார மீன் அருந்தி ஆனும் பெண்ணுமாய்க் காவிரி நாட்டை நோக்கிச் செல்லும் காட்சி அவர்க்கு இன்பம் அளித்தது. அவற்றை “ நாராய் நாராய்” என்று நயந்து அழைத்தார்; அவற்றின் காலழகை யும், வாயழகையும் அருமையாகப் புகழ்ந்தார்.

“நாராய் நாராய் செங்கால் நாராய்

பனம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்”

என்று பரிந்து பாடினார். சிவந்த காலும் செம்பவள வாயும் உடைய நாரைகாள் ! உம்மிடம் ஒன்று சொல்கின்றேன். சிறிது செவி சாய்ப்பீராக. நீங்கள் செல்லும் திசையில் காவிரி நாட்டிலே சத்திமுற்றம் என்ற ஊர் ஒன்று உண்டு. அங்குள்ள குளத்தின் அருகே என் குடிசையைக் காண்பீர் வாடிய முகத்தோடு என் வரவு பார்த்து வாசலில் காத்திருப்பாள் என் மனையாள். அவளிடம் போந்து தமிழ் மன்னன் அரசு வீற்றிருக்கும் மதுரையம்பதியில் ஆடையின்றி வாடையில் மெலிந்து, கையையும் காலையும் சுருட்டி மடக்கி, பெட்டிப் பாம்பு போல் பெருமூச்செறியும் ஏழையாகிய என்னை அம்பலத் திலே கண்டோம் நாங்கள் என்று அன்புகூர்ந்து சொல்லுங்கள் என்று வேண்டினார்.

“நீயும் உன் பேடையும்

தென்திசைக் குமரி யாடி வடதிசைக் காவிரி பாட ஏகுவீர் ஆயின் சத்திமுற் றத்து வாவியிற் சென்று நனைகவர்க் கூரை கணைகுரற் பல்லி வரவுபார்த் திருக்கும் மனைவியைக் கண்டுணம் கோமான் வழுதி கூடல் மன்றத்து ஆடை யின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலுறத் தழிஇ