பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஆற்றங்கரையினிலே

“ஏரி இரண்டும் சிறகா, எயில்வயிறாக்

காருடைய பீலி கடிகாவாச் - சீரிய அத்தியூர் வாயா, அனிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப் பொலிவு” என்பது பெருஞ் சித்திரனார் வாக்கு காஞ்சியம்பதி ஒர் அழகிய மயில் போன்றது. நெடியமதில் அம் மயிலின் உடல் இருமருங்கும் அமைந்த ஏரி அதன் சிறகு அத்தியூர் அதன் வாய், அடவியே அதன் தோகை என்பது. இப்பாட்டின் கருத்து .

இப்போது சின்னக் காஞ்சி என வழங்கும் பகுதியே அத்தியூர் என்று முன்னாளில் அழைக்கப் பெற்றது. அத்தியூரில் அமர்ந்த பெருமாளைப் பாடியுள்ளார். ஆதி ஆழ்வார்களுள் ஒருவர்.” r

இந்நகரில் வாழ்ந்த ஆன்றோர்களில் ஒருவர் அறவன அடிகள். அவர் புத்த சமயத்தைச் சார்ந்தவர்; மாசற்ற மனத்தினர் மாதவ முனிவர். அல்லவை கடிந்த அறவன அடிகள்” என்று மணிமேகலைக் காவியம் அவரைப் போற்றுகின்றது. கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் வாய்ந்த இவ் அடிகள் முதுமையுற்ற நிலையில் காஞ்சி மாநகரம் போந்து தவம் புரிந்திருந்தார். அங்கு வ்ந்தடைந்த மணிமேகலையின் தகுதியறிந்து புத்த சமயக் கொள்கையை ஐயந்திரிபற அறிவுறுத்தினார். இவ்வண்ணம் துறவுள்ளம் வாய்ந்த துயோரைத் தவநெறியில் உய்த்த அடிகள் தங்கியிருந்த இடம் “அறவணன் சேரி” என்று பெயர் பெற்றது. காஞ்சிபுரத்தில் இன்று அறப்பணஞ் சேரி என்று அப்பெயர் மருவி வழங்குகின்றது.

சீன நாட்டு நல்லறிஞர் ஒருவர் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே தொண்டை நாட்டுக்கு வந்தார்; காஞ்சிபுரத்தைக் கண்டார். மக்களின் வாழ்க்கையைப்

  • “ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகேத்தும்

ஆழியான் அத்தி யூரான்"