பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெல்வேலி 176

சிறந்த தமிழறிஞர். கவி பாடும் திறமையும் பெற்றவர். ஒரு மாத காலம் காவற்புரையில் சிறையிருந்த இருவரும் கவிபாடிக் காலங் கழித்தனர். ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று நம்பி, தென் திருப்பேரையில் கோயில் கொண்ட இறைவனை நினைந்து மனங் கசிந்து பாடினர்.

நாள்தோறும் இவர்கள் காவற்புரையில் இருந்து கவி பாடும் செய்தியைக் காவலாளர் வாயிலாகக் கேள்வியுற்ற வடமலையப்பன் அவ்விடத்திற்கு வந்து அன்னார் கல்வித் திறமையை அறிந்து சிறையினின்றும் அவரை விடுவித்தார் என்று ஒரு வரலாறு கூறுகின்றது. சிறைக் கோட்டத்தில் அவ்விருவரும் பாடிய பாமாலை மகரநெடுங் குழைக் காதர் பாமாலை என்று வழங்கி வருகின்றது. -

குற்றவாளிகளை அடைத்து வைக்கும் வன் சிறைக் கோட்டமும் நெல்லை மாநகரில் இருந்ததாகத் தெரிகின்றது. தண்டனை பெற்ற குற்றவாளிகளின் காலில் கையிலும், விலங்கிட்டு அடைத்து வைத்திருக்கும் சிறைக் கோட்டம் விலங்கடி என்று பேர் பெற்றிருந்தது. நெல்லையம்பதியில் மேலரதவீதியை யடுத்து விலங்கடி முடுக்கு என்னும் பேருடைய சிறிய தெரு ஒன்றுள்ளது. அதுவே பழைய சிறைக் கோட்டம் இருந்த இடம் ஆகும்.

நெல்லை மாநகரின் தீர்த்தத் துறையாகிய சிந்துபூந்: துறை சாலப் பழமை வாய்ந்தது. பூந்துறை என்பதே அதன் பழம் பெயராகும். அத்துறையில் நீராடப் போந்த திருஞான சம்பந்தர் அதன் இருமருங்கும் அமைந்த செழுஞ் சோலையைக் கண்ணுற்றார். அச்சோலையில் மகிழ்ந்து விளையாடிய மந்திகளை நோக்கி வியந்து நின்றார். அணி அணியாக மந்திகள் கிளைக்குக் கிளை தாவியபோது மரக்கொம்புகளில் மலர்ந்திருந்த மலர்கள் குலுங்கிச் செந்தேன் துளிக்கக் கண்டார். அக்காட்சியை ஓர் அழகிய பாட்டாகப் பாடினார். -