பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 ஆற்றங்கரையினிலே

லத்திற்கும் இடையே அமைந்த மேலகரத்திற் பிறந்த திரி கூட ராசப்பக் கவிஞரே குற்றாலக் குறவஞ்சி என்னும் அருமையான நாடகம் இயற்றியவர். அந்நூலுக்குப் பரிசாக நாயக்க மன்னர் நயந்தளித்த குறவஞ்சி மேடு என்ற நன்செய் நிலமும், கருப்புக்கட்டி ஊற்றும் குற்றாலத்தில் இன்றும் காணப்படும். அங்கு நாட்டப்பட்டுள்ள பழங்கல் ஒன்று குறவஞ்சிக் கவிஞரது நினைவுச் சின்னமாக இன்றளவும் நின்று நிலவுகின்றது.

தென்காசியில் உள்ள கல்லும் கதை சொல்லும் திருக் குற்றாலத்திற்குச் செல்லும் நெறியில் அடிபட்டான் பாறை” என்ற கல்லொன்று உண்டு. அப்பாறையின் வரலாற்றைக் குறவஞ்சி நாடகத்திலே காணலாம். -

முன்னொரு நாள், குறுகிய மனமும் பெருகிய செல் வமும் உடையான் ஒருவன் குதிரைமீது ஏறிக் குற்றாலத்தை நோக்கிச் சென்றான். பாதையில் அமைந்த பாறையின் அருகே வந்தபோது அங்கு நின்றார் சிலர் அவனைத் தடுத்தார்கள். தான் என்னும் அகந்தை யுற்ற அத்தருக்கன் சீற்றம் தலைக்கொண்டான். இப் பாறைதான் திருக் குற்றாலத்தின் எல்லை; இதன்மீது பரிமாவின் மேலேறிச் செல்லலாகாது; இது புனிதமான இடம் என்று பணிவாகக் கூறித் தடை செய்த மக்களைத் தாறுமாறாக ஏசிவிட்டுத் தன் வாசியை ஒட்டினான் அத்தருக்கன். நடந்த குதிரையின் நான்கு கால்களும் பாறையில் நன்றாக ஒட்டிக்கொண்டன. அடியெடுக்க மாட்டாமல் அலமந்து நின்றது அவ் விலங்கு. அன்று முதல் அடியொட்டுப் பாறை என்று பெயர் பெற்றது அப்பாறை.

“ஆசார ஈனத் தருக்கன் குதிரை

அடியொட்டுப் பாறை

அடிஒட்டி னாற்போலும் தேசத்துக் கொக்கெல்லாம்

கண்ணிக்குள்ளேவந்து

சிக்குது பார்கறி தக்குதுபார்”