பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459 ஆற்றங்கரையினிலே

சென்றார். சின்னாளில் வருவேன் என்று சொல்லிச் சென்றவர் பன்னாளாகியும் வரக்காணேன் இங்கு அவரையே நினைந்து நான் இருக்க, அங்கே தமிழிலே தோய்ந்து அவர் இருக்க நேர்ந்தது பண்டை வினையின் பயனோ? பாவியேன் செய்த பழவினையோ?” என்று மனம் உருகிப் பேசுகின்றாள்.

இவ்வாறு பாடிய பாவை வரதுங்கராம பாண்டியன் தேவி. அம்மன்னனது வேலின் வெம்மையும், இயற்றிய அவன் நூலின் செம்மையும், ஒரு பழம் பாட்டால் விளங்கு கின்றன. இம்மன்னன் தென்காசிக்கு அருகேயுள்ள கருவையம்பதியிலே ஈடுபட்டு அருமையான அந்தாதியும் மாலைகளும் பாடியுள்ளான். .

இப்பாண்டியன் காலத்தில் அதிவீரராம பாண்டி யனும் வாழ்ந்தான். அவனும் சிறந்த கவிஞன், செந்தமிழ்ப் புலமை பெற்று விளங்கியவன். நைடதம் என்ற நூல் இயற்றி அழியாப் புகழ் அடைந்தவன் அவனே. வெற்றி வேற்கை வீர ராமன், கொற்கையாளி என்று நறுந்தொகை அவன் புகழைப் பாடிற்று.

பிற்காலப் பாண்டியர்கள் என்று தென்னாட்டு வரலாற்றிலே பேசப்படுகின்ற பராக்கிரமன் முதலாய பாண்டியர்கள் நற்றமிழ்ப் புலமையோடு சிற்பக் கலையிலும் சிறந்த ஆர்வமுடையராய் இருந்தனர் என்பது தென்காசித் திருக்கோயிற் பணியினால் தெரிகின்றது. அங்குள்ள கற்றுரண்களில் வடிக்கப்பட்டுள்ள உருவங்களைக் கண்டால் கண் களிக்கும்; கருதினால் மனம் திளைக்கும்.

கல்லிலே நின்று காட்சியளிக்கின்றாள் ஒரு மங்கை; அவள் மேனிலத்தும் நானிலத்தும் மிக்க எழில் உடையாள்: அழகு துள்ளும் முகத்தினாள்; கமுகை வென்ற கழுத்தினாள் சின்னஞ் சிறிய இடையினாள்; வன்னச் சேலை உடையினாள்; கருவமிருக்கும் மங்கைப் பருவத் தாள். ஒரு கையிலே கண்ணாடி பிடித்து மற்றொரு கையை