பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி 200

கொடையிற் சிறந்த அதிகமான் என்னும் குறுநில மன்னனை வாயார வாழ்த்திப் பாடினர் ஒளவையார். தன் தலையையும் கொடுத்து ஒரு புலவரின் வறுமையை ஒழிக்க முற்பட்ட குமணனைச் சிந்தை குளிர்ந்து பாடினார் சாத்தனார். இன்னோரன்ன செய்திகள் சங்க நூல்களால் அறியப்படும்.

சங்கப் புலவர்கள் காலத்திற்குப் பின்பு தமிழகத்தில் கொடுப்போர் அருகினர்; கொள்வோர் பெருகினர். பாடவல்ல புலவர்கள், ஏட்டிலே தமிழ்ப் பாட்டைத் தீட்டிக்கொண்டு சிறு பொருள் படைத்தோரை நாடித் திரிந்தனர். பாட்டும் உரையும் அறியாத மாந்தரின் ஒட்டைச் செவிகளில் பசுந்தமிழை உகுப்பாராயினர். அன்னார் திலைமை கண்டு இரக்கமுற்றார் நம்மாழ்வார்; புலவர்களே! இம்மண்ணுலகில் செல்வர் இப்போதில்லை’ என்று தமிழ்ப் புலவர்களுக்கு அறிவித்தார். “வறும் பூவில் சென்று பாடும் வண்டுபோல் செவிச்செல்வம் பெறாத புல்லரைப் பாடிப் பொழுது போக்குதல் நன்றோ வாய், விளைந்து உண்ணக் கருதும் வழக்கத்தை ஒழித்து மெய். வருந்த உழைத்து வாழும் வழக்கத்தை மேற்கொள்வீர் என்று ஆழ்வார் அருளிய அறிவுரை தமிழ்ப் புலவர்க்கு எஞ்ஞான்றும் ஒளி நெறி காட்டுவதாகும்.

“ வம்மின் புலவீர் : தும் மெய்வருத்திக்

கைசெய்து உய்ம்மினோ இம்மண்ணுலகில் செல்வர் இப்போது

இல்லை நோக்கினோம் தும்இன் கவிகொண்டு நும்மிட்டா

தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்மணி என்திரு

மாலுக்குச் சேருமே”

என்பது திருவாய்மொழி.