பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 ஆற்றங்கரையினிலே

மடம் என்று பெயர் பெற்ற அந்நிலையத்தில் கலை ஞானமும் மெய்ஞ்ஞானமும் நிரம்பிய மேலோர் பலர் விளங்கினர்; தென்கலையும் வடகலையும் வளர்த்தனர். அன்னார் பெருமை தென்னாடெங்கும் பரவிற்று. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த நல்லறிஞர் ஒருவர் செப்பறை மடத்தை நாடி வந்தடைந்தார்; கல்விக் களஞ்சியமாய் விளங்கிய கண்க சபாபதி தேசிகரைக் கண்டார். அவர் அடியின் கீழ் அமர்ந்து அருங்கலை பயின்றார். தமிழ் மொழியில் இலக்கணக் கொத்து முதலாய பல நூல்கள் இயற்றிப் புகழ் பெற்ற அப்பெரியார் செப்பறை மடத்தைச் சிந்தையாரப் போற்றியுள்ளார்.’

முத்தமிழின் சுவை தேர்ந்த வித்தகர் பலர் அவ்வூரிலே தோன்றினர். அன்னவருள் ஒருவர் மன்னன் முத்துசாமி என்று பாவலர் உலகத்தில் பாராட்டப் பெற்றவர்; அவர் கார்காத்த வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்; கற்றவர்க்கு உற்ற துணைவர். தென்பாண்டி நாட்டுக் கவிஞருள் ஒருவராகிய அழகிய சொக்கநாதர் அவருடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் உரியராயினார்.”

ஒருநாள் மன்னன் முத்துசாமியைக் கண்டு பரிசு பெறக் கருதி வந்தார் ஒருவர். அப்போது வள்ளல் வெளியே சென் றிருந்தார். அழகிய சொக்கநாதர் அவரை அன்புடன் வர வேற்றார். உண்பதற்கு இனிய கனிகளைக் கொடுத்து உபசரித்தார். வந்தவர் தமது மத்தளத்தை எடுத்து அழகிய சொக்கநாதரிடம் தமது கை வரிசையைக் காட்டத் தொடங்கினார். அவர் கைதேறாத கற்றுக்குட்டி என்பதை மத்தளம் நன்கு முழக்கிற்று. அப்போது வள்ளல் தம் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார். அழகிய சொக்கநாதர் அவரை எதிர்கொண்டு அழைப்பார்போல் வெளியே எழுந்து சென்று, மன்னவா! சற்று முன் இங்கே ஒருவர் வந்தார் : மத்தளத்தை எடுத்தார் ஓயாமல்