பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயல் மாநகரம் 222

புகழ்ந்து வாழ்த்தினர் என்ற செய்தியை மார்க்கப் போலோ எழுதியுள்ளார்.

அவர் கண்ட காயல் துறைமுகமும் சில நூற்றாண்டுகளில் தூர்ந்து போயிற்று. காயலையும் கடல் கைவிட்டு அகன்றது. இப்பொழுது சீரிழந்த சிற்றுாராகக் காணப்படுகின்றது காயல். ஆயினும் அவ்வூரிலே வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டிய மண்டபமொன்று இன்றும் காட்சியளிக்கின்றது. வெள்ளையரோடு வெம்போர் விளைத்த கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனைக் குலதெய்வமாகக் கொண்டவன். அங்கு நடைபெறும் பூசையைப் பாஞ்சாலங் குறிச்சியில் இருந்துகொண்டே அறிந்து தொழுவதற்காக ஒரு நாழிகை வழி துரத்துக்கு ஒரு நகரா மண்டபம் கட்டியிருந்தான். அவை ஒன்றினின்று மற்றொன்று எடுத்தியம்பும் நகராவின் ஒசையால் அவன் பூசை வேளையைத் தெரிந்து கொள்வான். திருச்செந்தூருக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் இடையேயுள்ள பாதையில் பாழடைந்த சில நகரா மண்டபங்கள் இன்றும் காணப்படுகின்றன. காயலில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு எதிரே காணப்படும் சதுர மண்டபம் அவற்றுள் ஒன்றாகும். பாஞ்சாலங்குறிச்சியில் விடுதலைக் கொடி நாட்டிய வீரக்குடியின் சீலத்திற்கு ஒரு சான்றாக விளங்கும் மண்டபத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும் காயலைக் காண்பதுவும் நன்றே.