இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
249 ஆற்றங்கரையினிலே
குமரகுருபர முனிவர் என்று தமிழ்நாடு போற்றும் இப் பெரியார் நிறுவிய திருமடம் இன்றும் காசியம்பதியில் காட்சி தருகின்றது. அங்கிருந்து அவர் தொடுத்த காசிக் கலம்பகம் என்னும் பாமாலையில் காசியின் மணம் கமழ்கின்றது.
“ பாவலரும் நாவலரும் பண்மலரக் கண்மலரும்
காவலரும் ஏடவிழ்க்கும் காசியே’
என்று முனிவருடன் சேர்ந்து நாமும் அந்நகரைத் திசை நோக்கித் தொழுவோம் !