பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி 248

பண்கண் டளவில் பணியச்செய்

வாய், படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்டல கோடியுண்

டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ

சகலகலா வல்லியே”

என்று பாமாலை அணிந்து போற்றினார்.

நாமகளின் அருளை முன்னிட்டு முனிவர் நாடாளும் மன்னனிடம் சென்றார். செவ்வி பார்த்து அவன் முன்னே போந்து செம்மையான சொற்களால் தென்னாட்டார் படும் தொல்லைகளை எடுத்துரைத்தார். முனிவர் பேசிய தெள்ளிய மொழிகள் மன்னன் உள்ளத்தைக் கவர்ந்தன. அவர் விரும்பியவாறே காசி மாநகரில் உள்ள கேதார கட்டத்தில் மடம் கட்டிக்கொள்ள இடமளித்தான் மன்னன். அங்கு முனிவர் முயற்சியால் எழுந்த மடம் குமாரசாமி மடம் என்று பெயர் பெற்றது.

அத்திரு மடத்தில் தமிழ் மணம் கமழ்ந்தது; தெய்வ நலம் திகழ்ந்தது. வடநாட்டு மொழியின் வாயிலாகத் தென்னாட்டுப் பண்பாட்டையும் பக்திப் பாடல்களின் சுவையையும் விரித்துரைத்தார் முனிவர். இவர் சில சமயங்களில் கம்பராமாயணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளசி தாசர் அந்தப் பிரசங்கங் களைக் கேட்டு உவந்தனர் என்றும், கம்பராமாயணத்தில் உள்ள கருத்துகளைத் தாம் இந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக்கொண்டனர் என்றும் கூறுவர். *

குமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், பக்கம் 29

- டாக்டர் உ.வே. சாமிநாதையர்.