பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 ஆற்றங்கரையினிலே

பசியை ஆற்றுதலே முதற் கடமை எனத் துணிந்து எழுந்தான். வேட்டையாடினான். அடித்து வீழ்த்திய விலங்குகளைக் காட்டுத் தீயில் வதக்கினான்; கொழுவிய தசைகளைக் கோலிற்கோத்து, பதத்தில் காய்ச்சி, பல்லினால் அதுக்கி, நாவினால் சுவைத்து, கல்லையில் வைத்து, காளத்தி நாதனுக்குப் படைத்து மகிழ்ந்தான்.

அப்போது அந்திமாலை வந்தது. நாட்டையும் வீட்டையும் மறந்தான் திண்ணன், காளத்தி நாதன் அருகே வில்லும் கையுமாய் நின்று விடியுமளவும் காவல் புரிந்தான். இவ்வண்ணம் பகலில் வேட்டையாடி இறைச்சி கொணர்வதும், இரவில் கண் துயிலாது காவல் செய்வதும் திண்ணன் பணியாய் அமைந்தன. -

ஒருநாள் ஈசன் உண்ணுதற்கேற்ற இறைச்சியைத் திருத்தி எடுத்து வரும்பொழுது காளத்திநாதன் கண்ணில் குருதி வடியக் கண்டான் அத்தொண்டன் திடுக்கிட்டான். மயங்கி மண்மேல் விழுந்தான். “ இது வேடர் செய்த தீமையோ? விலங்கினம் செய்த கொடுமையோ?” என்று கதறினான். பச்சிலைகளின் சாற்றைப் பிழிந்து புண்ணுற்ற கண்ணில் வார்த்தான். பின்னும் குருதி நிற்கவில்லை. அந் நிலையில் “ஊனுக்கு ஊனிட்டால் உற்ற நோய் தீரும்” என்னும் பழமொழியை நினைந்தான் உள்ளம் மகிழ்ந்தான்; துள்ளி எழுந்தான்; கூரிய அம்பை எடுத்தான்; தன் கண்களில் ஒன்றைப் பெயர்த்து எடுத்துக் குருதி, வடிந்த ஈசன் கண்ணில் அப்பினான். புண்பட்ட கண் பண்பட்டது. செந்நீர் நின்றது; திண்ணன் சிந்தை குளிர்ந்தது. ஆடிப்பாடி ஆனந்த முற்றான்.”

நின்ற குருதியைக் கண்டு நெஞ்ச்ம் தழைத்த திண்ணன். மனம் துளங்க இறைவனது மற்றொரு கண்ணினின்றும் செந்நீர் பெருகிற்று.” கண் நோய்க்குக் கைகண்ட மருந்து உண்டு” என்று கவலை தீர்ந்த திண்ணன் தன் கண்களில்