பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாதிசிப்புலியூர் 56 மொழியைப் பிழையறப் பேசவும், எழுதவும் மாணவர் களைப் பயிற்றினர். அதற்குச் சாதனமாக நிகண்டுகளும், இலக்கணங்களும் இயற்றினர். சாதிமத வேற்றுமையின்றி மாணவராக ஆர்வமுற்ற இளைஞர்க்கெல்லாம் மாசறக் கல்வி பயிற்றிய காரணத்தால் பள்ளி என்னும் சொல் கல்விச் சாலையைக் குறிப்பதாயிற்று. ‘ பள்ளிக்கு வைத்தல் ஒன்றால் படிக்க வைத்தல் என்று கருதினர் கற்றோரும் மத்தோரும். இத்தகைய பள்ளிகளுள் தலைமை சான்ற பாடலிபுத்திரப் பள்ளியில் மாணவராகச் சேர்ந்தார் மருள்

பள்ளியில் மட்டற்ற ஆசையோடு அவர் கலை :வின்தார். அங்கு அருங்கலை பயிற்றிய சமணச் சான்றோர் தனின் சிலமும் புலமையும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. சமண சமயமே மேலான சமயம் என்னும் கருத்து அவரது இளமையுள்ளத்தில் மெல்ல அரும்பிற்று. தெள்ளிய அறிவும் திருந்திய சொல்வன்மையும் வாய்ந்த மருள் நீக்கியார் படிப்படியாக உயர்ந்து அப் பள்ளியின் தலைவர் ஆயினார். அந் நிலையில் மருள் நீக்கியார் என்ற பெயரை நீக்கி அவர்க்குத் தருமசேனர் என்ற பெயரை இட்டனர் சமணச் சான்றோர். சேனர் என்பது சமண சமயத்தில் உயர்ந்த திலை அடைந்தோர்க்குரிய சிறப்புப்

பெயர்களுள் ஒன்று. அப் பெயர் பெற்றார் சிலர் தேவாரப்

பாட்டிலே குறிக்கப்படுகின்றனர்.

“சத்து சேனலும் இந்து சேனனும் தருமசேனனும் கருமைசேர்

  • x . : * “... ?? கந்து சேனலும் கனக சேனனும்

ருஞான சம்பந்தர் பாசுரத்திலே சமண சமயத்தில்

விளங்கிய சிலர் பெயர்களைக் காணலாம்.

  • * .* + - - + w க்கொண்டு தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர்.