பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் 8

தமிழ்ப் பெருங் காவியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அம் மன்னன் புகழைப் பாடுகின்றன. மதுரை மாநகரில் பிழைக்க வந்த கோவலனைக் கொன்று பிழை செய்தான் பாண்டியன் நெடுஞ்செழியன் அக் கொடுமையை அறிந்தாள் அவன் மனைவியாகிய கண்ணகி, மனம் கொதித்தாள். புண்ணுற்ற கணவன் மேனியில் விழுந்து புல்லும் கல்லும் கரைந்து உருகப் புலம்பி அழுதாள். ‘கரவறியாத என் கணவனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொன்றானே மதுரை மன்னன்’ என்று கதறினாள். தன் கணவன் குற்றவாளி அல்லன் என்று நிறுவும் பொருட்டுக் காவலனது மாளிகையை நோக்கி நடந்தாள். மன்னன் ஆணை பெற்று, மாளிகையின் உள்ளே சென்று அரியணையில் அமர்ந்திருந்த அரசன் முன்னே தின்றாள். அழுது அழிந்த கண்களோடும், புழுதி படிந்த மேனியோடும், அவிழ்த்து சரிந்த கூந்தலோடும் எதிரே நின்ற அவலக் காட்சியைக் கண்ட அரசன் மனம் பதைத்து “ மாதே ! நீ யார்? “ என்று வினவினான். அப்போது கண்ணகி தன் ஊரும் பேரும் உரைப்பாளாயினாள்.

‘அரசே கன்றை இழந்த ஒரு பசுவின் கண்ணிரைக் கண்டு மனம் பதைத்து, அவ்வுயிர்க்குத் தவறிழைத்த தன் அருமைப் புதல்வனைத் தேராழியாற்கொன்று முறை செய்த நீதி மன்னற்குரிய பூம்புகார் நகரத்திற் பிறந்தவள் நான் ” என்று பெருமிதமாகப் பேசினாள் கண்ணகி. ஆரூர்ச் சோழன் பெற்ற பெருமை அவன் மரபினர்க் கெல்லாம் உரியதாயிற்று:

பூம்புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினத்தில் அரசு வீற்றிருந்தான் நெடுமுடிக் கிள்ளி என்னும் சோழ மன்னன். அவன் மைந்தன் உதயகுமரன் என்பவன் அந் நகரில் வாழ்ந்த மணிமேகலையைக் காதலித்தான். துறவுள்ளம் படைத்த அம் மங்கை இளவரசனை ஏற்றுக்கொள்ள வில்லை. அவளை எவ்வாற்றானும் கைப்பற்றக் கருதி