பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 ஆற்றங்கரையினிலே

என்ற பெயரைத் தனக்கே உரியதாக்கிக்கொண்ட காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்பும், அங்கு அரசு வீற்றிருந்த வளவன் பெருமையும் அப்பாட்டில் அழகாக விளக்கிக் காட்டப்படுகின்றன. சோழவள நாட்டில் “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் செழும் புனல் பொன் கொழிக்கும்” என்று பாடுகின்றது பட்டினப்பாலை,

பசிப்பிணியின் பகைவனாகிய திருமாவளவன். வெற்றிடங்களையெல்லாம் விளைநிலம் ஆக்கினான்; காடுகளை வெட்டித் திருத்திக் கழனியாக்கினான்; காவிரி நீரைக் கால்களின் வழியாக எடுத்துக் குளங்களில் நிரப்பி வளம் பெருக்கினான். கடல் வழியாகவும், தரை வழியாகவும் பல நாட்டுப் பொருள்களும் புகார் நகரத்தில் வந்து நிறைந்தன. கப்பல்கள் இடையறாது போக்குவரவு புரிந்து கொண்டிருந்த துறைமுகத்தில் உயரிய விளக்கொன்று நின்று ஒளி வீசியது. தரையிலே தவழ்த்து வரும் குழந்தையை முகமலர்ந்து கை நீட்டி அழைக்கும் தாய் போல், கடலில் மிதந்து வந்த கப்பல்களைக் கதிர்க்கரம் விரித்து வரவேற்றுத் துறைமுகத்திற்கு அழைத்த அவ் ஒளிதிலையம் (Light House) கலங்கரை விளக்கு என்று பெயர் பெற்றது.

இரு பாக்கங்களை உடையதாய் விளங்கிய பட்டினத்தின் நடுவே பெரியதோர் அங்காடி (Market) அமைந்திருந்தது. பகலும் இரவும் பண்டமாற்று நிகழ்ந்த பட்டினத்தில் தாளங்காடியோடு அல்லங்காடியும் நடைபெற்றது. அங்காடி என்னும் அழகிய தமிழ்ச் சொல் இப்பொழுது பழகு தமிழில் பெரும்பாலும் வழங்கு வதில்லை. எனினும் தமிழினத்தைச் சேர்ந்த கன்னடத்திலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் அச்சொல் இன்றும் வழங்கி வருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலே பிற்ந்து, அத் தொன்னகரின் பெருமையெல்லாம் தன்