பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர்

யெடுத்துச் செல்லாத காலங்களில் அன்னார் கோழிப் போர் கண்டு மகிழ்ந்தனர்.

“ வருசெருஒன்று இன்மையினால் மற்போரும்

சொற்புலவர் வாதப்போரும் - இருசிறைவா ரனப்போரும் இகல்மதவா

ரனப்போரும் இணையகண்டே”

சோழ மன்னன் ஒருவன் இன்புற்றான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. போர் நிகழாத காலங்களில் சோழ மன்னன் தலைநகரில் மல்லர்கள் மற்போர் புரிவர்; புலவர்கள் சொற்போர் புரிவர்; கோழியும் கோழியும் கொடும் போர் புரியும், வேழமும் வேழமும் வெம்போர் விளைக்கும்.

இத்தகைய காட்சிகளில் ஈடுபட்டிருந்த சோழ மன்னன் கண்ணெதிரே ஒரு கோழிக்கும் யானைக்கும் போர் மூண்டது. ஒழிந்தது கோழி என்று எண்ணி ஊரார் எல்லோரும் விழித்த கண் இமையாமல் பார்த்து நின்றனர். சிறிது நேரத்தில் வேழம் தோற்றது; கோழி வென்றது. வீரக் கோழியை வேந்தனும் வியந்து புகழ்ந்தான். கோழியூர் என்ற பெயர் உறையூருக்கு அமைவதாக’ என்று ஆணை பிறப்பித்தான். சிலப்பதிகாரம் முதலிய செந்தமிழ் நூல் களில் கோழியூர் என்ற பெயர் உறையூருக்கு வழங்குகின்றது. சேர நாட்டில் உள்ள கோழிக்கோடும் (Caicut) சோழ நாட்டில் உள்ள கோழியூரும் முன்னாளில் மன்னர் வாழ்ந்த மணிநகரங்களாகும்.

கற்பரசியாகிய கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரில் கோவில் அமைத்த பின்னர், பிற நாட்டுப் பெரு மன்னரும் தத்தம் நாட்டில் பத்தினிக் கோயில் கட்டத் தலைப்பட்டார்கள். அப்போது உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசு புரிந்த பெருங்கிள்ளி என்னும் சோழ மன்னன் “கோழியகத்துப் பத்தினிக் கோட்டம் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தான்” என்று சிலப்பதிகாரம்