பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 g வல்லிக்கண்ணன் யாமிங்கே வாழ்கின்றோம் யாருக்கும் அச்சமில்லை. தெய்வீக வழிப்பாதை சிற்றளவும் அறியா நீ! செய்கைஎனைப்பழிக்கும் சிறுமையை விட்டுவிடு! வான்தவ மோனத்தின் வாகைபெறச் செல்பவன்யான் நான்என தென்கின்ற நாத்தீகப் பேர்வழிநீர்! என்பாதை நீபுரியாய், இருவருக்கும் பாதைவேறு: இப்படி மேடையிலேயே சுடச்சுடச் சொல்களால் பாய்ச்சினார் பெருங்கவிக்கோ. இது போன்ற வேறு நிகழ்ச்சிகளும் கவிஞரின் கவி அரங்க அனுபவங்களில் உண்டு. - ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒரு வரை, தக்கவன் நீ! என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், உன் தலைமை யில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக் கிறாயே, அதனால் தான்’ என்று பெருமிதத்துடன். "புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்று கிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ’ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது? இந்த நெஞ்சுத் துணிவு பெருங்கவிக்கோவிற்கு உள்ள தற்குக் காரணமே, எவர்க்கும் அஞ்சாது, எவர் தயவை ஆயும் கெஞ்சாது, தனது எண்ணங்களை, உண்மையை,