பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சமூகப் பார்வையும் வாழ்வு நெறியும் பெருங்கவிக்கோ மனித நேயமும் கருணை உள்ளமும் பெற்றுள்ள கவிஞர். சமூகத்தில் நீடித்து நிலவுகிற அவலங்களும் பொருளாதார ஏற்ற இரக்கங்களும் , ஏழை கள் உழைப்பாளிகள் அனுபவிக்கிற வாழ்க்கைக்கொடுமை களும் பிறவும் அவர் உள்ளத்தில் குமுறல் ஏற்படுத்து கின்றன; சிந்தனைகளைத் துண்டுகின்றன. இந்நிலைமை கள் மாற வேண்டாமா என்று மக்களைக் கேட்டு, சிந்திக்கும்படி உணர்வூட்டும் கவிதைகளை அவர் படைத்துள்ளார்.

  • நாள் முழுதும் பாடுபடும் ஏழை, துன்ப

நரகத்தில் உழல்கின்றான்! வேலைசெய்து தோள்கடுக்க உழைத்திட்ட தோழன்:கட்டத் துணியின்றிப் பணமின்றிப் பதறும் போது ஆள்கொழுத்தே அலைகின்றான் பணக்கொழுப்பன்! அவன் பின்னால் சுற்றுகிறான் தினக்கொழுப்பன்! பாட்டாளி பதறுகிறான், ஆடை நெய்யும் பண்பாளி கதறுகிறான் எழுத்தாளன்சேர் பாட்டாளி பணத்தாளி வெளியீட்டான்கால் பந்தாக உருளுகின்றான்; உழவன் ஈங்கே