பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


196 வல்லிக்கண்ணன் ஈனர்க்குத் துதிபாடிக் கால்பிடித்தே எத்தர்களாய் மாறிவிட்டார் மானக்கேடு!” படித்துப் பட்டங்கள் பெற்றவர்கள் மனசாட்சி இன்றி, துணிச்சல் இன்றி, தாதர்களாம் பேடிகளாய் வாழமுற்படுவதைக் கண்டும், எண்ணியும் சீற்றம் கொள்ளும் பெருங்கவிக்கோ, அவர்களது போக்கை வன்மையாகச் சாடிப் பல இடங்களில் கவிதை பாடியிருக் கிறார்.அவர்கள் நிலை மாறவேண்டும்என்று உறுதியாய்க் கூறுகிறார். அவற்றில் ஒன்றை இங்கே குறிப்பிடுவது. பொருந்தும் "படித்தே நல் பட்டங்கள் பெற்ற சான்றோர் பச்சோந்திக் கூட்டம் போல் வாழ்கின்றார்கள் இடித்துரைக்கத் தெரியவில்லை! எவர் வந்தாலும் இளிக்கின்றார் போய்ப்பல்லை தன் வாழ்வுக்காய், நடிக்கின்றார், கிடைப்பவற்றைச் சுருட்டிக் கொண்டு. நண்டுகள் போல் விரைகின்றார்! இவர்கள் போக்கை அடிக்கின்ற நாளில் தான் தமிழும் வாழும் அடிமை யெனும் விலங் கொடியும் அறிவு, சேரும்!” தொண்டென்றால் பொருள் என்ன? அன்பு நெஞ்சில் சுடர்விட்டு எரிகின்ற விளக்கே என்று தெளிவு படுத்து கிறார் பெருங்கவிக்கோ. பண் பின் விடிவெள்ளி பொதுநலத் தொண்டேன்பேன்’ என்றும் கூறுகிறார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பண்புநலம் சிறந்தவர் களாய் விளங்க வேண்டும். பகுத்தறிவால் உண்மைகளை உணரும் திறமும் அவர்க்கு வேண்டும். கேள்வி ஞானத்.