பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - வல்விக்கண்ணன் வந்த கவிஞர் ஒரு உவமையைக் கூறி விளக்குவது கவனிப்புக்குரியது : 'உற்பத்தி செய்தோ னுக்கோ ஒராடை மேலே இல்லை! பிற்புத்திச் செல்வ ருக்கோ பெருந்துணிப் பட்டுப் போர்வை! சிற்பத்தைச் செய்தோன் கண்ணைத் தீக்கம்பால் குத்த லைப்போல் அற்பர்கள் வதைக்கும் போக்கை ஆழத்தில் புதைப்போம்” தமிழில் எத்தனை எத்தனையோ உயர்ந்த படைப்பு கள் இருக்கின்றன. அவற்றின் பெருமை தமிழ் நாட்டுக்கு வெளியே பரவவில்லை. தமிழகத்தில் கூட அவற்றின் மாண்டை அனைவரும் அறியும்படி உணர்த்தப்பட வில்லை. நமது செல்வச்சிறப்புகளை உலகத்துக்கு எடுத்துச் சொல்ல எவரும் முனையவில்லை. இந்த நிலையை எடுத்துக்கூறும் பெருங்கவிக்கோ அடுக்கு அடுக்காய் உவமைகளையும் பொருத்தமாகப் பாடி யுள்ளார். உண்மை நிலையை அழுத்தமாய் சுட்டுவதற்கு அவ்வுவமைகள் உதவுகின்றன. கவிதை இதோ 'புதையலைத் தோண்டிப் பேழையிலே பூட்டி வைத்துக் கதையளந்த தன்மையைப் போல்-கனல்துண்டைப் பாதுகாப்பாய் ஒளி மறைத்து வைத்த உயிர்ப்பில்லாத் தீமையைப் போல் வண்ண எழிற் சோலை வாசலை அடைத்ததுபோல் தண்ணிலவை வேண்டுமென்றே தான் சிதைத்த கொடுமையைப் போல்