பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்ா 夏ö赛 மக்களுக்கு உண்மையிலேயே விடுதலை கிடைத்திருக் கிறதா? சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கக் கேடுகளும் பொய்மையும் தலைவிரித்து ஆடுகின்றன. மக்கள் தெளிவின்றி வாழ்கிறார்கள். படித்தவர்கள் சொரணையற்று வசிக்கிறார்கள். குடிப்பவர்களும் பொறுப்பற்றவர்களும் பெருகி விட்டார்கள். இத்தகைய போக்குகள் நீங்கி என்று விடிவு ஏற்படு கிறதோ, என்று பொய்மையும் பேடித்தனமும் போயொழி கிறதோ, என்று தீமை ஒடுக்கப்பட்டு நன்மை ஓங்கி வளர இடம் ஏற்படுகிறதோ, நாட்டிலும் சமூகங்களிலும் மலிந்து கிடக்கிற கீழ்மை இருள் எல்லாம் என்று முற்றாக மறைந்து மனித வாழ்வில் ஒளி நிறைந்த விடிவு தோன்று கிறதோ, அன்று தான் உண்மையான விடுதலை பிறந்தது என்று கொள்ள முடியும். இதை அறிவுறுத்துவதற்காகவே பெருங்கவிக்கோ விடிந்தால் விடுதலை’ என்ற குறுங் காப்பியத்தை படைத்திருக்கிறார். ஒரு சுதந்திர நாளின் முதல் நாள் இரவில் கவிஞருக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இதன் கதை அமைந்துள்ளது, * * அருட்கனி என்ற நேர்மையாளன், பிறர்க்கு உதவும் பண்பாளன், நல்ல மனிதன்தான் இக்காப்பியத்தின் தலைவன். விடுதலைக்கு முதல் நாள் இரவு தன் பணி முடித்து வீடு திரும்பும் அருட்கனி பேருத்து கிடைக்காமல் அவதிப்படுகிறார். மிகுந்த சிரமங்கள் அனுபவித்து, வழியில் அந்தப் பேருந்தைப் பிடிக்கிறார். அதில் உள்ள சிலரின் இழி செயலாலும் கயமைத் தனத்தாலும் அவர் அடையும் துன்பங்களையும், பேருந்துப் பணியாளர்களின் போக்குகளையும், நீதி வேண்டிச் சென்றபோது காவல் துறையினர் நடந்து கொண்ட தன்மைகளையும். கொடுமைகளைக் கண்டும் சகமனிதர்கள் கொதிப்புறாமல் ப்ொங்கி எழுந்து தட்டிக் கேட்காமல்-துயரங்கள்