பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 வல்லிக்கண்ணன் முற்பட்ட பெருங்கவிக்கோ இறைபக்தியைப் போற்றும் அளவுக்குப் பகுத்தறிவுக் கருத்துக்களையும் புதுமைச் சிந்தனைகளையும் உணர்ச்சியோடு பாடியிருப்பது குறிப் பிடத்தகுந்தது. முந்தைய இரு பெரும் கவிகளைப் போலவே சேது ராமனும் கவிதையின் பல வடிவங்களிலும், பல சந்தங் களிலும் பாடல்கள் இயற்றி வெற்றி கண்டிருக்கிறார். ஒசை நயம் தூக்கி நிற்கும் பரணி, இனிய இசை ஒலி கலந்த காவடிச் சிந்து, வெண்பா முதலிய வெவ்வேறு வடிவங்களிலும் பெருங்கவிக்கோ தம் ஆற்றலைப் புலப் படுத்தியிருக்கிறார். இசைப் பாடல்களும் பாடியிருக் கிறார். - மரபுக் கவிதை முறையில் தனிப்பாடல்கள், நீண்ட கவிதைகள், குறுங்காவியங்கள், கவிதை நாடகங்கள், காவியங்கள், பயணக்கவிதைகள் என்று பல சாதனை களைப் புரிந்திருக்கிறார் பெருங்கவிக்கோ, இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார். 'இறையருள், குருவருள், குறிக்கோளின் மீது பற்று, தமிழை-தமிழினப் பெருமையை உலக அரங்குகளில் உயர்த்திக் காட்டாமல் ஒய்வதில்லை என்ற ஆவேச உணர்ச்சிகள் உந்துகிற வேகமும் தாகமும் மீதுறப்பெற்று உலக நாடுகளில் சுற்றித் திரிந்து, பன்னாட்டுத் தமிழர் களையும் சந்தித்து ஒற்றுமை உணர்வை வளர்க்கப் பாடு படுகிறார் கவிஞர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அமைத்து, மாநாடுகள் நடத்தி, தளராது தமிழ்ப் பணி புரிகின்றார். 'கவிதைத் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு எண்ணற்ற செயல்கள் செய்திருப் பினும், கவிதைக் கலங்கரை விளக்கமான பணிகள் ஆற்றி யிருப்பினும், தமிழ் நாட்டார் போதுமான அளவு அறிய வில்லை, ஆதரவு தரவில்லை. இதழாளர்கள் இம்மி