பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் () 21 'முப்பது நாட்டின்மேல் முன்சென்று நம் தமிழர் செப்பரும் வாழ்முறை சேர்ந்துள்ளார்-இப்படியாய்ச் சேர்ந்தாரைச் சேர்த்துத் திசைத்தமிழர் ஒன்றாக்கி தேர்ந்த ஒற்றுமை செய்தோமா?" என்ற கேள்வியை முன் வைத்து அவரே பதிலும் உரைக் .கின்றார். அங்கங்கே சென்றே அவரவர் பாடாக்கி தங்கள் சுயநலமே தான்முனைந்தார்-எங்கணுமே வைய மெலாம் வாழ்ந்தும் வகைமோசந் தன்னலத்தால் நையச்செய்தாரே நலம்.” ஆகவே, உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒருங்கி ணைப்பது முக்கியக் கடமையாகும் என்று உணர்ந்த கவிஞர், பெரிதும் முயன்று, 1977-ம் ஆண்டில் "பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அமைத்தார். உலகின் பல நாடுகளிலும் இம்மன்றத்தின் கிளைகள் அமைத்து நன்கு செயல் படச் செய்தார். கவிஞரின் உலகளாவிய தமிழ்ப் பணி இதுவாகும். "பன்னாட்டுத் தேர்தமிழர் பாங்குறவை நாம் * 岔量6鲈”ö母 இந்நாளில் மன்றம் எடுத்தேனே-தன்னலம் கிஞ்சிற்றும் இல்லை கிழமை தவறவில்லை வஞ்சக மில்லை மனம்’ என்று இப்பணி பற்றி அவர் குறிப்பிட்டிருக்கின்றார். 'உலகத் தமிழர் உணர்வுகொள்!" என்று முழக்கம் செய்யும் கவிஞர், இழநத புகழைத் தமிழினம் மீட்டு வளமான, கீர்த்தி மிக்க, வருங்காலத்துக்கு வழி அமைக்க