பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 29

  • வண்டமிழ் விதைக்கின்றேன்-பொல்லார் வசைகள் பொறுத்தே மலரும் எண்ணம் வளர்த்துக் களிக்கிறேன்.

ஏக்கப் பெருமூச்சேற்றே தோளில் என்பணி தொடர்கின்றேன்-மேன்மை ஆக்கம் விளைக்கும் அறநெறிப் பாதை ஆர்த்தே நடக்கின்றேன். என்மொழி என்னினப் பெருமை காட்ட எங்கும் செல்கின்றேன்-ஈனர் புன்மொழி பொறுத்தே புனர்வாழ்வமைக்க புகுவழி வெல்கின்றேன்" "என் பயணங்கள் ஏதோ உல்லாசமாக நாடு பார்க்க வேண்டும் என்று செல்லும் உல்லாசப் பயணமல்ல இலக்குகளையும் நம் மொழி இனமேம்பாட்டையும் உலக அரங்கில் உயர்த்திக் காட்டும் ஒப்பற்ற நோக்கங்களுக் காகச் செல்லும் இலட்சியப் பயணமாகும் என்றும் கவிஞர் அறிவுறுத்துகிறார் . "நுகத்தடியைக் கழுத்தினிலே மாட்டிக் கொண்டு நோய் தரும் பேர் துன்பத்தைத் தாங்கி நின்று அகத்திலெழும் உணர்ச்சி யெனும் கலப்பை கொண்டு அறிவென்னும் உழவனாகித் தமிழ்நிலத்தை. மகத்துவத்தின் பிறப்பிடமாய் ஆக்க ஓடும்’ பெருங்கவிக்கோவின் இலட்சியப் பணிகளை தமிழ் நாடும் தமிழ் இனமும் உணர்ந்து போற்றும் நன்னாள் எந்நாளோ?