பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 3 35 மணம்தரும் உழைப்போர் இந்த மமதையர் பின்னே கெஞ்சிக் குணம் விற்றுக் கடனை வாங்கிக் கும்பியை நிறைக்கின்றார்கள்! மலையுச்சிப் பணக்கொழுப்பர் மடுப்போலும் எளிய மக்கள் விலைபேசிச் செழிக்கின்றார்கள் விற்பனை ஏலத்தைப் போல் கலைஞரும் தொழிலாளர்நல் கடும்.உழைப்பாள ரெல்லாம் தலைதாழ்ந்து பணிந்துநின்று தவிக்கிறார் வெட்கக்கேடு!” இவ்வாறு துறைதோறும் நிலவுகின்ற சிறுமைகளை எடுத்துக்கூறி, அவை மாற வேண்டியதன் அவசியத்தையும் மாற்றுவதற்கான யோசனைகளையும் வலியுறுத்துகிறார் கவிஞர் இருபது கட்டளைகள்' தொகுப்பில். எத்துறைதனிலும் நம் இந்திய நாட்டில் வீணாய் அடிமைத்தனங்கள் மண்டி வளர்வதை வேதனையுடன் சுாட்டுகிறார் அவர். "பண்ணையில் அடிமை; கீழ்மேல் பான்மையில் அடிமை; உற்ற மண்ணகப் பணிகள் எல்லாம் மாறாத அடிமை மோகம்! எண்ணிய முடிக்க லாற்றா எத்தர்கள் காலம் எல்லாம் கண்ணியம் இல்லா இந்தக் கடைநிலை வளர்க்கின்றார்கள்!