பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 55. சிந்தனைத் திறன் எழுப்பும் சூடான கேள்விகள்தான் நியாயமான சிந்தனைகள், ஆனால் இப்படி எல்லாம் எடுத்துச் சொன்னால், 'நாத்திகன் என்றிடுவீர். நாத்தடிக்க ஏசிடுவீர்; கூத்தான சுடு சொல்லால் கொட்டிடுவீர்; ஆள் சேர்த்து வந்து அரற்றிடுவீர்” என்றும் உணர்ந்து சொல்கிறார் அவர். அதற்காக அவர் தயங்க, வில்லை. மேலும் சூடான கணைகளை எறிகின்றார். 'எந்த மதத்தலைவர் இந்த நல்உலகத்திலே முந்தை மனிதர்களை முறைப்படி நடக்கவைத்தார்? சுயநலத்திற்காகத் தோற்றுவித்த மதங்க ளெல்லாம். வியந்துமே பாராட்டி வேண்டிநின்றீர்! மதிகெட்டீர் மனிதர்களில் வேற்றுமையேன்? மதங்கள் வந்து பிரிப்பதும் ஏன்? தனியாகப் பிரிந்துபல சாத்திரங்கள் சாற்றுவதேன்? உலகத்தில் பிறந்திட்ட ஒப்பிலா மனித ரெல்லாம் பல மதத்தார் ஆகாமல் ஒருமிதமாய் ஆனால் என்? சண்டை சச்சரவும் சாய்ந்து மடிந்திடுமே விண்டிடா மகிழ்ச்சி வெள்ளம் விரைவில் ஏற்படுமே!" ன்ன்று கவிஞர் குறிப்பிடுவது மக்கள் மனசில் பதிய வேண்டிய உண்மை ஆகும். அண்ட மெல்லாம் என் மதமே ஆணிவேர் என்று சொல்லும், பண்டை மதமிருந்து வந்த மதம் வரைக்கும், எந்த மதத்தில் ஊழல் இல்லாமல் போச்சுதப்பா என்று கேட்டு, ஒவ்வொரு மதத்திலும் நிலவுகிற குறைபாடுகளை விரிவாகவே சுட்டிக் காட்டுகிறார் பெருங்கவிக்கோ. வெறுமனே குறை கூறிக் கண்டித்துப் பாடி விட்டு ஒதுங்கி நிற்கவில்லை அவர். நல்வாழ்வுக்கு வகை செய்யக் கூடிய நல்ல யோசனையை அவரே முன் வைக்கிறார்.