பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

பட்சம், வீட்டிலாவது இருந்திருக்கலாகாதா? அதுவும் இல்லை. அவளுடைய சித்தி ஊருக்குப் போய் விட்டா ளாம்! சூடு கண்ட வெண்ணெய் போல அவள் மனம் உருகியது. ஒருக்கால் அவர் சாப்பாட்டு அகத்துக்கு வங் திருப்பாரோ? ஐயோ, பாவம் என்ற புதிய குழப்பம் ஏற் படவே, அவள் சற்று வேகமாக கால்களே எடுத்து வைத்து கடக்க முற்பட்டாள். குதிகால் இரண்டிலும் சூடு பற்றியது. சித்திரைக் கோடையல்லவா? தாகமாக இருந்தது. வீட்டையே குறிவைத்து அவள் விரைந்து பிராட்வே திருப்பத்தில் மடங்கியபோது, சாவித்திரி!’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள் அவள். தன் முன்னே ஆடம்பரமே உருவமாக-நாகரீ கத்தின் பிரதிபிம்பமாக-அலங்கார ஆடைகளின் கூட்டுச் சக்தியாக பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். காலில் ‘ஸ்லிப்பர் கையில் பெண்குடை'; பெண் பதுமையென கின்றாள். ஆனால், சாவிததிரிதான் இப்போது பேச கா வெழாமல் திகைப்புற்று நின்றுகொண்டிருந்தாள். உள் ளங் கால் குடு உச்சக்தலேக்கு ஏறிக்கொண்டிருந்ததை அவள் மட்டும்தானே உணர முடியும்?

சாவித்திரி, என்னைப் புரியவில்லையா? ‘நீங்கள்...!” வியப்புணர்ச்சிக்குறி அவள் வதனத்திலும் கொக்கி யிட்டுக்கிடந்தது. - -

‘நான்தான் மாலதி தஞ்சாவூரில் சாரதாம்பாள் ஹைஸ்கூலில் நான் உன்னேடு படிக்கவில்லையா?”

சாவித்திரி இன்னமும் தெளிவு பெற்றாள் இல்ல! “ஸ்கூல் டிராமாவிலேகூட பிரைஸ் வாங்கியிருக்கேனே நான்...? என்றாள் மாலதி, வலது கையிலிருந்த டம்பப் பையைச் சுழற்றியபடி இடது கையில் இருந்த குடை யின் நிழல் சாவித்திரிக்கும் உதவியது.