உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அவளது கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றாகச் சிதறின. ‘இருந்திருந்து இவர் ஹோட்டலில் ஸெர்வராகவா வேலை பார்க்க வேணும்?...இவ்வளவு நாளாகக் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் இவர், இரவில் வீடு திரும்பும் ரகசியம் இதுதானா? ஏன் இதை என்னிடம் சொல்லவில்லை? நான் மனம் புண் படுவேனோ என்றுதான் ஒளித்து வைத்திருந்தாரா?... கடைசியில் எப்படிப்பட்ட பயங்கர விளைவு உண்டாகிவிட்டது?... ஐயோ, தெய்வமே! என் கண் முன்னாலேயே அவரை எப்படியெல்லாம் ஏசி விட்டாள் மாலதி எல்லாம் பணத் திமிர்! ...வாட்டும்!...”

மாலதியின் மூலம் தன் கணவனுக்கு விடிவு காணச் செய்ய முடியும் எனக் கொண்டிருந்த சபலத்திலும் சலனம் கண்டது; சாவித்திரியின் நெற்றி நரம்புகள் தெறித்து விழுந்தன. சமைத்திருந்த சோறு ஆறிவிட்டிருந்தது. ஆனால், மனம் மட்டும் ஆறவில்லை.

இரவு எட்டு மணிக்கு ராமசாமி மனை புகுந்தான்.

இல்லத்தரசியின் விழிவெள்ளம் பதியின் பாதங்களை நனைத்தது. இருந்திருந்தாற்போல சாவித்திரி மயங்கிச் சாய்ந்தாள். வந்த டாக்டர் நல்ல சேதி சொன்னார்:

‘சாவித்திரி, நீ அம்மாவாகப் போகிறாய், கோடிச் செம்பொன் கொடுத்தாலும் ஈடு சொல்ல இயலாத ‘அம்மா’ என்னும் புனித பதவிக்கு கீ உயர்ந்து விடப் போகிறாய்! இன்னொரு நல்ல சேதியையும் சொல்லி விடுகிறேன். இனி மேல் நான் ஹோட்டல் சப்ளையர் அல்ல. மாம்பலத்தில் என் நண்பர் வைத்திருக்கும் டிரக் ஸ்டோரில் நான் ஒரு குமாஸ்தா. சம்பளம் நூற்றிருபது ரூபாய். இந்தா பணம் துாறு ரூபாய் முன் பணம் கிடைத்திருக்கிறது. காப்பி சாப்பிட வந்த நண்பர் அளித்த பரிசும் பதவியும் இனி நம்மைக் காப்பாற்றும். வீட்டு வாடகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு வருகிறேன். ஹோட்டலில்