பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


திருத்தப் பட்டிருக்கிறதாம். ஐயப்பாட்டைத் தீர்த்துப் போக வேண்டியது அவன் கடன். மெய்தான்! கறார்விலையைச் சொல்லி அனுப்பப்பட்டான் சிறுவன்.

"பாப்பா !..."

"அப்பா !..."

அப்பா என்னைப் பார்த்தார். மறுவினாடி. 'கடகட' வென்று சிரித்தார், "நீ என்னம்மா, இன்னும் தவழ்ந்து விளையாடுற பாப்பாவாவே இருக்கிறதுக்கே ஆசைப்படுறே" என்றார்.

சின்னஞ்சிறு பாப்பாவைப்போல தரையில் தவழ்ந்து காட்டிய நான் எழுந்தேன் தாவணியைச் செம்மையாக்கிக் கொண்டேன். எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது!... வெட்கம் என்ன வெட்கம்!.... என் அப்பாவுக்கு நான் என்றென்றும் பாப்பாதானே? பாரதியாரின் பாப்பாப் பாடல் அப்பாவுக்குத் தேன் குழல் சாப்பிடுவதுபோல இருக்குமே!

"அம்மா !..."

"ஊம்!..."

"என்னம்மா நீயே சிரிச்சுக்கிறே?"

'ஒன்றுமில்லை' என்று பாவனையைக் கைமுத்திரையில் அமைத்தேன்.

ஒரு சம்பவம்.

அப்போது, அம்மா இருந்தாள். உடன் அப்பாவும் இருந்தார். நான் ரேடியோப் பெட்டியருகில் அமர்ந்திருந்தேன். ஒரு பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தேன் அம்மா என்னிடம் வந்து, பாட்டு என்ன ராகம் என்றாள். எனக்குத் தெரியவில்லை... 'பைரவி' என்றாள். தியாகராஜர் போன்ற மகான்களை நினைப்பூட்ட வல்லதாம்