13
எழுதிச் செல்லும் விதியின் கை!
ஊர் வாய் முண முணத்தது-வல்லமை அதிகம்: எதிரொலிக்குப் பலம் மிகுதி.
“முத்தம்மாவும் முருகேசனும் புண்ணியம் செஞ்ச வுங்கதான்-புருஷன் - பொண்சாதி ஆகிப்பிட்டாங்க. அவங்க மாரியாத்தாளுக்கு எடுத்துப் போட்ட பூ கல்ல பூ.ஆத்தாடியோ முத்தம்மா கழுத்திலே மஞ்சக் கயிறு ஏறுறதுக்குள்ளே எத்தனை தொல்லை, என்ன பாடு? .. பாவம், முருகேசன் தவியாத் தவிச்சிப் பூட்டானே?. அன்னிக்கு எலுதி வச்சவன் தலையெழுத்தை அழிச்சி எளுதிப்பிடத்தான் தலைகீழா நின்றான் மாயாண்டி. முடிஞ்சிதா?...முத்தம்மாவும் முருகேசனும் சின்னஞ் சிறுசுகள். செல்லத்தேவன் கம்மாயிலே மீன் கண்டு பிடிச்சி விளயாடுற காலத்திலே இருந்து இதுக ரெண்டும் புருஷன் பொண்டாட்டி விளையாட்டு விளையாடிச்சுதுக. இன்னிக்குத்தான் அதுக கனவு பலிச்சுது. பிள்ளையும் குட்டியுமா சொகமாயிருக்கோணும். ஊர் காத்தா அந்த மாரியாத்தா காப்பாத்தனும்!..."
✽✽✽
முதல் இரவு-போதையும் போதமும் 'உடலுறவு’ கொள்ளும் ஒரு சுபதினம்!
"இரவே, நீ வா!"-தம்பதி சமேதராக வரவேற்றனர்.