பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191


பைச் செய்ய வேண்டியிருக்குது. ஆசாரி சொல்லுற பணத்துக்கு வகை இல்லீங்க. பொண்ணுப் பொறந்தவ நான் வேறே எங்கே போயுங்க பணம் புரட்டுவேன்?... இந்தத் துப்பு சம்பந்தி வீட்டுக்கு எட்டப் புடாதுங்களே?...இல்லேன்னா, ஆயிரம் ரெண்டாயிரம் கூட மறு பேச்சாடாம எங்க அண்ணன் தருமே?...பொண்னேட கல்யாணச் செலவுக்கே இந்த வீட்டை அடமானம் வச்சு தானுங்க திரனும்!..அத்தான், நீங்க தெய்வமாவே இருந்து, என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்கிடுங்க...அத்தான், அத்தான்!...”

மகள் அறியாமல், ஆசாரியிடம் அந்தத் தாலியை நீட்டி அதையும், ‘அழித்து’ப்பயன் படுத்திக் கொள்ளுமாறு கோரினால் கல்யாணி அம்மாள். அன்றிரவு பூராவும் ஆயிரம் தரம் “அத்தான்”, “அத்தான்!” என்று நாமாவளி பாடிக் கொண்டேயிருந்தாள்!

***

முகூர்த்த தினம் கிர்ணயம் ஆனது.

மகள் கோமதியின் வதுவை விழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செவ்வனே முடித்த நிறைவில் மனம் மகிழ்ந்து கின்றாள் கல்யாணி அம்மாள். திருமண விழாவுக் காக வீட்டை ‘அடமானம்’ வைத்துப் பணம் பெற ரகசிய ஏற்பாடுகளைச் செய்தாள் அவள். மானம்புச் சாவடியில் தெரிந்தவர் ஒருவரை வரவழைத்து விஷயத்தைச் சொன்னாள். அவர் யோசித்து முடிவு சொல்வதாகக் கூறிப் போனர். போன பெரியவர் திரும்பிய போழ்தில், வாஸ்தவ மாகவே ‘பெரிய மனிதராகவே’ வந்தார். வீட்டை அடமானம் வைக்கத் தேவையில்லே யென்றும், தேவைப்படக் கூடிய பண உதவியைச் செய்வதாகவும், மெதுவாகப் பணத்தைத் திருப்பித் தரலாமெனவும் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் காப்பதாயும் உத்தாரம்