உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


பேசாத தெய்வத்திற்குப் பேச முடிந்தது; ஆனால் பேசும் எனக்குப் பேச முடியவில்லை. ஆத்திரமும் அழுகையும் என் சிவப்பு உதடுகளுக்குக் கட்டுப்பாடு விதித்து விட்டன. குறளிமோடி கிறுக்கி விட்டதா, என்ன?

பொன்னனும் பொன்னியும் கனவுகளைத் தாங்கிக் கொண்டு காதலர்கள் என்ற உறவை இன்னும் பலமாக்கத் தம்பதியாயினர். ஆனால், அவர்களுக்கு இவ்வளவு சீக்கிரத்திலேயே சோதனை விளையுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்ன, சற்று முன் குரல் கொடுத்த அந்தத் தெய்வம் கூட நினைக்கவில்லை போலிருக்கிறது!

பொன்னி என் பேரில் பரிவு காட்டினாள். என் துணைக்குப் பொன்னன் என்றால் நிரம்பப் பிடித்தம். இந்த இணையின் துயரம் கண்டு எங்கள் இதயங்கள் வெடித்து விட்டன.

மறுபடியும் அழுகைச் சத்தம் கேட்டது. பரிதாபம்! புதுமணக் காதல்ர்கள் பரிதபித்துக்கொண்டிருந்தனர். ஈருடலே ஓருயிராக்கிக் கொண்டவர்கள் ஓருயிர் இரண்டாக வெட்டப்பட்ட மாதிரி துடிதுடித்தனர். பொன்னனும் பொன்னியும் ஒருவரையொருவர் இறுகத் தழுவிய வண்ணம் அலறினர். அவர்களது ஓலத்தினை மிஞ்சிவிட்டது, இடையீடு. விட்டு எதிரொலித்த நையாண்டிச் சிரிப்பு.

கண்ணோட்ட்த்தை ஒரு வழிப்படுத்தக் கண்ணீரை விலக்கினேன் நான். என் இறகுகள் பட படத்தன; உயிர்க்கூடு தத்தளித்தது.

“ஆசை அத்தான்! திருப்புச் சீட்டுக்கள் இடம் மாறி விழுந்திருக்கின்றன. நான்தான் உங்களை ஆடைய வேண்டிய ஆடுதன் ராணி!... ஓடி வாருங்கள், தேடி வந்தவளிடம்!...ம்...சிக்கிரம் அவள் விட்டு விலகி வாருங்கள். என் குரலுடன் சேர்ந்து கத்தும் அந்த ஆண் குரல் அவளு