பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


டைய குரல் வளையைக் கௌவிப் பிடிக்க எத்தனிக்கிறது.. அதற்குள் ஓட்டமாக என்னிடம் வந்து விடுங்கள். அவனும் அவளும்தான் ஜோடிக்குப் பொருத்தம். நாகரீகத்தின் உச்சாணிக் கிளையில் இருந்த நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்?..வாருங்கள், நாம் உம்மை மறுபடியும் அழகு இளைஞனாக மாற்றுகிறேன்... என் அந்தமும் அன்பும் உங்களைக் காப்பாற்றும் நீங்கள் வரமாட்டீர்களா? அத்தான் உங்களுக்குச் சிரமம் ஏன்?... இதோ, நானே உங்களை அண்டி அழைத்துக் கொள்ளுகிறேன்!... அத்தான்.......! இன்றுதான் என் கனவு பலிக்கப் போகிறது"

ஏன் இந்தச் சத்தம்?

ஊழித்தாண்டவம் தொடங்கிவிட்டது போலும்?

நான் இந்தக் கண்ணாறாவிக் காட்சியைக் காண என்ன பாவம் செய்திருக்க வேண்டும்!

பொன்னன் - பொன்னியின் - வெறும்கூடுகள் தாம் தரையில் கிடக்கின்றன. உயிர்கள் இரண்டும் வெவ்வேறு திசை நோக்கிப் புறப்பட்டுவிட்டன.

வந்த ஆவிகள் இரண்டும் வெவ்வேறு முனையிலிருந்து, சிரித்தன!

வானவீதியில் குரல்:

மனிதன் உண்டாக்கிய செயற்கைச் சந்திரனைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்கள்; மேலை நாட்டு விஞ்ஞானியின் சிந்தனைக்குப் புகழ் மாலை புனைந்து நிம்மதியுடன் வீற்றிருக்கும். உங்களுக்கு ஒற்றைத் தனி விண்மீனான என்னுடைய குரல் கேட்குமோ, என்னவோ?