உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

  • வாழ்வும் வளமும்

உலகில் சமா தான்ம் நிலை பெறவே மாந்தன்

உண்மையில்போ ராடநினைக் கின்றான்; ஆனால் கலகவிவ காரத்தில் வாழ்நா ளெல்லாம்

கழிக்கின்றான். அந்தோ! நன் மகிழ்வைத் தேடி அலைகின்றான்; ஆனால் பாக் கியமில் லாமை

அலைக்கின்ற துன்பம்-இவை கடக்க லானான்! நிலையான பொருளாக்கம் ஆன்ம மேன்மை

நேசித்தும் அவன்.வறுமை தனில்ஆழ் கின்றான்!

இந்தஉல கத்தில்உள்ள பொருள்க ளெல்லாம்

இயற்கையிலே முறையாக வளர்ந்து உயர்ந்து வந்து, பல மாற்றங்கள் அடையும். ஆனால்

மனிதன் மட்டும் திறமையொடு பிறக்கின் றான்காண்! இந்தஉல கப்பொருள்கள் யாவற் றுக்கும்

தலைமையினை ஏற்கின்ற தகுதி பெற்றான்! அந்தமனி தன்பெருமை ஒருவ ராலும்

அளந்துவிளக் கிடஇயலா அருமைத் தாகும்!

  • கோவை அகில இந்திய வானொலியில் 14-1-1986 இல் ஒலிபரப்பானது.