பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 157

மாட்டார்கள்; சலனப்படுவார்கள். உயிர்ச் சார்புடை யவர்கள் - ஆன்ம வலிமையுடையவர்கள் எளிதில் துணிவு பெறுவார்கள்.

"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தி லிடர்ப்படோம் நடலை யிலலோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் - இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்க வெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடி இணையே குறுகி னோமே"

என்ற அப்பரடிகளின் திருப்பாட்டு துணிவிற் பிறந்த தூய சிந்தனை நிறைந்த பாட்டு.

துணிவுக்குப் பகை, இன்ப விழைவு, வெற்றிப் போதை: துன்ப அச்சம். ஆனால் வாழ்க்கை இன்பக் குறிக்கோளுடை யதே. வெற்றிகளைக் குறிக்கோளாய் உடையதே! வெற்றியும் இன்பமும் எளிதில் கிடைப்பதில்லை. பல துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து சென்ற பிறகு தான்் இன்பம் எய்தமுடியும். துணிவு என்பது வெற்றி தோல்வி-இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் குறிக்கோள் நோக்கத்தோடு பணிகளை இயற்றுவதற்குப் பயன்படக்கூடிய உள்ளம் உடைமையாகும். அர்ப்பணிப்பு உணர்வோடு உயிரையே இழக்க நேரிடும் என்று தெரிந்தாலும் கொண்ட குறிக்கோள் கருதி, உழைத்தல் உள்ளத் துணிவின்பாற்பட்டது. துணிவு, தெளிவான முடிவுகளை எடுக்கத் துணை செய்யும்; செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும். துணிவைத் துணையாகப் பெற்றவர்கள் சாதனைகள் செய்ய முடியும்; பெருமையுடன் வாழ முடியும். துணிவுடையரர்களே காலத்தை வென்று விளங்குகிறவர்கள். துணிவே துணை,

12