பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 13

ஒப்புரவு வாழ்க்கை

மானுடத்தின் மகோன்னத வெற்றிக்கு ஒப்புரவு நெறியைவிடச் சிறந்த வாழ்க்கை நெறி இல்லை. திருவள்ளுவர் விண்ணகத்திலும் மண்ணகத்திலும் ஒப்புரவு நெறியைவிட உயர்ந்த ஒன்றில்லை என்றார்.

"புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற”

என்பது திருக்குறள். திருக்கோயிலில் சிறந்த ஒப்புரவு நெறி வளர்ந்தது. திருக்கோயில் அமைப்பு முறையில் பற்பல பணி களை அவாவி நிற்பது. அந்த ஒவ்வொரு பணியையும், அவ்வப்பணிக்குத் தகுதியுடையவர். உயர்வு தாழ்வு மனப் பான்மையின்றி, கடமையுணர்வோடு செய்து மகிழ்வது திருக்கோயில் பணிகளில் தான்். திருக்கோயிலில் இறைவன் திருமுன்னர் திருவமுது படைக்கப்படுகின்றது. திருக்கோயி லைச் சார்ந்து வாழ்பவர்கள் - பணி செய்பவர்கள் அனை வரும் தம்முள் எந்த வேறுபாடுமின்றி அந்தத் திருவமுதைப் பங்கிட்டு உண்பதும் உழைப்பதும் ஒரு பொருள் பொதிந்த காட்சி! வாழ்க்கைக்கு உழைப்புத் தேவை. உழைப்புக்கு உணவு தேவை. திருக்கோயில் இயக்க அமைப்பில் உணவு வழங்கப்பட்டுவந்தது. பணநாயகத்திற்கு அங்கு இடமில்லை. அதனால், உழைத்தவர்கள் உடல்நலம் பெற்றிருந்தனர். திருக்கோயில் திருவமுதுமுறை நல்ல சத்துணவுமுறை. பொங்கல், வடை, பாயசம், அப்பம், சுண்டல், அவல், பொரி, இவை இறைவன் திருமுன்னர் படைக்கப்படும் பண்டங்கள். Լյն-ԱI)] வகையிலுள்ள புரதம்-உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அதனாலேயே மாலை நேரத்தில்