பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் 15

கலைக்கூடம்

வாழ்க்கை, சோற்றினால் மட்டும் ஆவதன்று. ஆன்மாவிற்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை; அழகுணர்வு தேவை, திருக்கோயில் ஒரு சிறந்த கலைபயில் கூடம், திருக்கோயில் சிற்பக் கலையின் உறைவிடமாக விளங்குவது. மதுரை, கிருஷ்ணாபுரம், திருப்பெருந்துறை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம், பேரூர், காஞ்சி, மாமல்லபுரம், தஞ்சை முதலிய ஊர்களில் உள்ள திருக்கோயிற் சிற்பங்கள் சிறந்தவை. கல்லில் எவ்வளவு அருமையான வேலைப் பாடுகள் செய்துள்ளார்கள்! அதுவும் கருங்கல்லில் சிற்ப உருவங்கள் அமைத்தல் மிகவும் கடினமானது. அதுபோலவே பலவேறு வண்ணங்களால் தீட்டப் பெற்ற ஓவியங்களும் திருக் கோயில்களை அணி செய்துள்ளன. ஆடற்கலையும் பாடற்கலையும் இசைக்கலையும் வளர்ந்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவில் திறை நிலா நாளன்று முறையாக இராசராசேசுவர நாடகம் நடந்ததுண்டு. எண்ணற்ற மக்கள் கண்டு கேட்டு மகிழ்ந்தனர். திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த பண்ணிசை பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகுதியும் துணை செய்தது. அது போலவே நாதசுர இசையும் வளர்ந்தது; மனித குலத்தையும் வளர்த்தது. மக்கள் பாட்டில், இசையில் எளிதாக ஈடுபட வாய்ப்பிருந்த பொழுது "வேந்தலைக்கும் கொல் குறும்புகள்" இருந்த தில்லை; வன்முறை இருந்ததில்லை; வன்கண்மையும் கூட இருந்ததில்லை. இறைவன், ஏழிசையாய் இசையின் பயனாய் விளங்குகின்றான் என்பது தமிழர் முடிவு. இசையினாலேயே இறைவனை வழிபட்டனர். தமிழொடு இசை பாடி நெஞ்சு நெகிழ்ந்து நின்றுருகி வழிபட்டனர். ஆதலால் திருக்கோயில்