பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இ குன்றக்குடி அடிகளார்

சமுதாயத்திற்கு மிக இன்றியமையாததாகிய கலைநலம் தரும் கலைபயில் கூடமாக விளங்கியது.

மருத்துவச் சாலை

மானிட வாழ்க்கை இனிதே அமைவதற்கு மருத்துவமும் தேவை. திருக்கோயிலைச் சார்ந்த வாழ்க்கை முறையில் மருத்துவம் சிறந்த முறையில் விளங்கியிருக்கிறது. திருக்கோயில் தத்துவத்தைக் கண்டவர்கள். புறத்தே திருக்கோயிலைக் கண்ட சித்தர்கள் ஊனுடம்பாம் திருக்கோயிலையும் பேண, சித்த மருத்துவம் கண்டார்கள். சித்த மருத்துவத் துறையில் நோய் வராமைக்குரிய முற்காப்பு நெறிகளும் உண்டு. நோய் வந்தபின் செய்தற்குரிய மருத்துவமும் உண்டு. ஏன்? இறைவனே மருந்தாகவும், மருத்துவனாகவும் நின்று அருள் செய்பவன். எனவே எண்ணற்ற நோய்களை நீக்கி, “மருந்தீசன்" என்றும், "வைத்தியநாதன்” என்றும் பெயர் பெற்று விளங்குகின்றான். திருக்கோயில் வளாகத்தில் சிறந்த மருத்துவச் சாலைகள் இருந்தன.

திருவாவடுதுறையில் ஒரு வைத்தியக் கல்லூரி இருந்தது என்று விக்கிரம சோழன் கல்வெட்டுக் (கி.பி. 13) கூறுகிறது. "சங்கரதேவியின் அறச்சாலை” என்ற உணவுச் சாலையில், உணவு அளிக்கப் பெற்றவர்களில் வைத்தியக் கல்லூரி மாணவர்களும் இருந்தனர். “முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலை"யிலும் மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும் இலக்கணம் படிப்பவர்களுக்கும் உணவு அளிக்கப் பெற்றது. என்றும், அக்கல்வெட்டுக் கூறுகிறது. காஞ்சீபுரம் பக்கத்தில் உள்ள திருமுக்கூடல் கல்வெட்டு, கி.பி. 1067இல் திருக்கோயில் வருமானத்திலிருந்து வீரசோழன் என்ற பெயரால் மருத்துவ