பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஜீ குன்றக்குடி அடிகளர்

நல்லூர்ப் பஞ்சாயத்தார் முன்னே நீதி கேட்டு நின்றமையை அறிக. அதுபோலவே செட்டிப் பெண்ணுக்கு நலம் செய்ய நினைத்த திருப்புறம்பியத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், திருக்கோயிலில் விளங்கிய நீதி சபையின் முன்னால் சாட்சி கூறி, உதவி செய்ததை ஒர்தல் வேண்டும். அதுபோலவே மதுரையில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல், மாமனாக வந்து வழக்குரைத்து நின்றமையையும் அறிக. ஆதலால், திருக்கோயில்கள் கடவுள் திருக்கோயில்களாகவும் மட்டு மல்லாமல் நீதிதேவதையின் திருக்கோயில்களாகவும் விளங்கின.

களவியலுக்கு வாயில்

தமிழர்கள் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்; வாழ்வாங்கு வாழ விரும்பியவர்கள். தமிழர் தம் உணர்வுக்கு ஏற்றவாறு திருக்கோயிலும், திருக்கோயிலை ஆட்கொண்டிருந்த கடவுள் தத்துவமும் தொழிற்பட்டன. பெண்களைப் பெருமைப் படுத்தும் அகனைந்திணை வாழ்க்கை தமிழர்க்கே உரிய சிறந்த மரபு. மதுரையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவன், ஆணும் பெண்ணுமாக இணைந்து காதல் செய்து வாழ்கின்ற நெறியினைக் கூறும் அகப்பொருள் இலக்கணத்தையே அருளிச் செய்தான்் என்பர். அந்நூல் இறையனார் அகப்பொருள் என்னும் பெயர் பெற்றது. திருக்கோயிலைச் சார்ந்து களவொழுக்கமும் கற்பொழுக்கமும் வளர்ந்தன. இறைவனே பெண்பால் உகந்து வாழ்ந்தான்் போகமும் செய்தான்். இதுவே திருக்கோயில் வளர்ந்த வாழ்க்கைத் தத்துவம். அதனால் அகனமர்ந்த மனையறத்திற்கு மாறாக வாழ்பவர்கள், பெண்ணைத் துறந்தவர்கள் திருக்கோயில் பூசனைக்கே யுரியவரல்லர் என்ற நியதி எழுந்தது.