பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியேன் விண்ணப்பம் 21 ஒரு நாள் அயலூரிலிருந்து பல மக்கள் இந்த ஊருக்கு ஓடிவந்தார்கள். அந்தத் திருடன் வந்து ஊரைக் கொள்ளே யிடுகிருன் என்று சொல்லிப் புலம்பினர்கள் அவர்கள். இந்த ஊரில் உள்ளவர்களும் பயந்து நடுங்கினர்கள். "இனி கம்முடைய முறைபோலும்!” என்று அவர்கள் ஒவ் வொரு கணமும் திருடனை எதிர்பார்த்திருந்தார்கள். அப்போது அந்தத் திருடனிடமிருந்து ஓர் ஆள் வங் தான். ஊரின் காட்டாண்மைக்காரருக்கு ஒலே ஒன்று கொண்டு வந்திருந்தான். 'இனிச் சந்தேகம் ஏது? அவன் தான் வரப்போவதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டான்' என்று தீர்மானித்தனர் ஊரார். நாட்டாண்மைக்காரர் ஒல யைப் பிரித்தார். பிரிக்கும்போது அவர் கை கடுங்கியது. சுற்றி கின்றவர்கள் யாவரும் கவலை தோய்ந்த முகத்தோடு அந்த ஒவேயில் என்ன எழுதியிருக்கிறது என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள். . . . நாட்டாண்மைக்காரர் முகத்தில் ஒளி பரவியது. சிறிது பெருமூச்சு விட்டார். "கள்வர் தலேவர் இந்த ஊருக்கு வரமாட்டாராம்" என்று சொன்னர் பக்கத்தில் கின்றவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதல்ை காட் ட்ாண்மைக்காரர். அதை உரக்கப் படித்தார். "மகாராஜ ராஜ ரீ காட்டாண்மைக்காரர். அவர்களுக்கு அடியேன் தண்டனிட்டுச் செய்துகொள்ளும் விண்ணப்பம் என்ன வென்ருல்"......கேட்கிறவர்கள். தங்கள் காதையே நம்ப வில்லை. திருடர் தலைவன அப்படி எழுதுகிருன்! "தங்கள் ஊருக்கு வந்து கொள்ளையடிக்கலாமென்று எண்ணியிருந்தேன். ஆனல் தாங்கள் நம்முடைய எச மானருக்கு வேண்டியவர்களென்று தெரிந்ததும் அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டேன். தங்களுக்கு என்னல் ஏதாவது உதவி வேண்டுமானல் நான் காய்போலக் காத் f - திருக்கிறேன்" என்று கடிதம் முடிந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/27&oldid=744389" இலிருந்து மீள்விக்கப்பட்டது