பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியேன் விண்ணப்பம் 25 வில்லை, தானே ஒலயையும் எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்கினன். . ‘'தேவரீர் பக்தசிரோமணி அவர்களுக்கு அடியேன் தண்டனிட்ட விண்ணப்பம் அடியேன் அறியாமையால் செய்த பிழை யெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்த ஏழையைக் காப்பாற்றவேண்டும்.................." இன்னும் என்னவெல்லாமோ எழுதி அனுப்பத் துணிந்தான். காரணம் என்ன? காடு, "எனக்குள்ள செறிவும் மணமும் கருமையும் உன்னிடம் தொற்றுவிட்டன” என்று தண்டனிடும் கருங் குழலாளும், உலகமெல்லாம் காணும் கண்ணுக்கு ஒளி தந்து மணிபோல் கின்று அருள் பாலிக்கும் பெருமாட்டியும், தேன் போன்ற மொழியையும் கோவைப்பழம் போன்ற இதழையும் உடைய திருவாயைப் பெற்றவளும், தென் கூடலில் இளம் பெண்ணுக எழுந்தருளியவளும் ஆகிய மீட்ைசியை அந்த அன்பன் வணங்கியதுதான். . இந்தக் காட்சிகளேயெல்லாம் கற்பனையால் விரித்துக் காணும்படி செய்தது பின்வரும் பாடல். * கான்தெண்ட னிட்ட கருங்குழ ல்ாளே,என். கண்மணியைத் - . தேன்தொண்டை வாய்ச்சியைத் தென்கூட லிற்சிறு பெண்பிள்ளேன்ய யான்தெண்ட னிட்ட பொழுதே, இயமன் எனக்கும், 'அடி யேன்தெண்ட னிட்டவிண் ணப்பம்' என்று ஒலை х எழுதுவனே. (தான் உவமையாகாமல் தோற்றதை உணர்ந்து காடானது வணங்கும் கரியகுழலே உடையவளே, தேன் போன்ற மொழியையும் கொவ்வைக் கனிபோன்ற உதட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/31&oldid=744394" இலிருந்து மீள்விக்கப்பட்டது