பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்கண் - கண்ணிஞல்ேகாம் பார்க்கும் பார்வையில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. கண்ணேத் திறப்பதல்ை மாத்திரம் எதிரே உள்ள பொருள். தெரியாது. எத்தனையோ சமயங் களில் காழ் கண்ணேத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தும், ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தமையால் அங்கே டோகிற வர்களைப் பார்ப்பதில்லை. கண் அப்போது முடியா இருந்தது? இல்லை. கண் பார்க்கும்போது கருத்தும் அதனோடு இணைய வேண்டும். அப்போதுதான் எதிர்கின்ற பொருளின் உருவத்தைப் பார்த்த அநுபவம் ஏற்படும். சிலர் கண்ணேப் பாதி விழித்துக் கொண்டே தூங்குவார்கள். கண் விழித் திருந்தாலும் அவர்களுடைய மனம் விழித்திருக்கவில்லை. அதல்ைதான் பார்க்கும் அநுபவம் உண்டாவதில்லை. ஆகவே, கண்ணும் கருத்தும் ஒன்றுபடும் போது பார்க்கிருேம், கண் பயன்படுகிறது; பார்த்தலாகிய செயல் நிகழ்கிறது. வேறு வகையாகச் சொன்னல் கண் உணர்ச்சி யுடையதாக வேண்டுமானல் கருத்தோடு கலக்க வேண்டும். . . எல்லோருக்கும் கண் இருந்தாலும், ஒரே பொருளேப் பார்த்தாலும், அவர்கள் பார்வையின் தன்மை வெவ்வேருக இருக்கிறது. ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். என் நண்பர் ஒருவர் மலையாளத்தில் காட்டிலாகாவில் வேலையாய் இருக்கிருர் அவர் நல்ல பெரிய சேகு ஏறிய கருங்காலி மரம் ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார். நல்ல அருமையான மரம் அது அதை என் வீட்டு முற்றத்தில் போட்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/56&oldid=744421" இலிருந்து மீள்விக்கப்பட்டது