பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 67


உள்ள உலகத் தீவுகளிலிருந்து ஒளி நமது பூமியை அடைய 100 கோடி ஆண்டுகளாகின்றன.

இந்த புதிய காட்சிகளைக் கொண்டு உலகப் பொருட்களின் சராசரி அடர்த்தியில் மாறுதலை உருவாக்கக்கூடிய கணக்கீடுகள் வெளியாகக்கூடும். அப்போது, உலகக் கோளத்தின் தற்கால வளைவு நிர்ணயமும், அந்த பொருளடக்கத்திற்கு ஏற்ப மாறுபடக்கூடும். அதனால், உலகத் தத்துவக் கணக்கீடுகள் மேலும் நன்றாக, தெளிவாகக் கணக்கிடக்கூடும்.

பெளதிக உண்மைத் தத்துவத்தை, நெருங்குவதற்கு மற்றொரு வாயில் கதவுதான் ஐன்ஸ்டைனுடைய ஐக்கிய வெளித்தத்துவமாகும். (Unified Field Theory) என்ற தத்துவமாகும்.

ஐன்ஸ்டைனுடைய இந்த தத்துவம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவே, அவரது அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் மணி மகுடமாகவே விளங்குகின்றது என்று கூறலாம்.

மனிதனுடைய வெளிப்புற எல்லைகளை இன்றும் விவரித்துக் கொண்டிருப்பது ஐன்ஸ்டைன் கண்டுபிடித்த (Relativity) ஒப்புமைத் தத்துவமேயாகும்.

மனிதனுடைய உட்புற எல்லைகளைப் பகுதித் தத்துவம் (Quantum Theory) உருவாக்கி இருக்கின்றது.

பரந்தவெளி, காலம், ஆகர்ஷணம், மற்றும் உணர்ந்து அறிய முடியாத வகையில் மிகப்பெரிய அளவில் பரிணமித்து வெகு தூரங்கள் வரையில் செயல்படும் உலகவெளியின் உண்மைத் தத்துவங்கள். இவையெல்லாம், ஒப்புமைத் தத்துவத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.