பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

159


காளையும் கன்னியுமோ, தமக்குள்ளேயே ஒருவரையொருவர் ஏய்ப்பதற்காகக் கபடமற்றவர்போல் நடிக்கின்றனர். இதனால் தான் இவர் தம் நடிப்பை, மூன்று தாள் திருப்பும் வேலைக்கு அண்ணன் எனக் கற்பனை செய்தேன் நான். இவர்தம் நடிப்புத் திறனை. "ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்" என்னுந் தொடரிலுள்ள 'போல' என்னும் உவமச் சொல்லால் சுட்டிப் போந்தார் திருவள்ளுவனார். காதலர் ஏதிலர் போல நோக்குதல் என்றால் அது நடிப்புத்தானே! காதலர் எங்கே? ஏதிலர் எங்கே? இருதிறத்தார்க்கு மிடையே, இரு துருவங்களின் தொலைவு உள்ளதே!.

இன்னொன்று:- காதலர் ஏதிலர் போல நோக்குவதில் ஒரு தனிச் சுவையும் உண்டு - நெஞ்சத்திலே ஒரு தனிப் பெருமிதமும் உண்டு - அதனால் தான். ஏதிலார் போல 'நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்றார் ஆசிரியர், இவர்கள் உள்ளத்திலே கள்ளத்தனம் உடையவர்கள் என்பதைக் 'காதலார்' என்னும் சொல்லும். வெளியிலே 'அரிச்சந்திரன் ஆட்டம்' ஆடுகிறார்கள் என்பதை 'ஏதிலார்' என்னும் சொல்லும் அறிவித்து நிற்பதை அறிந்து மகிழ்க.

இவர்கள் பொதுநோக்கு நோக்குவது ஒருமுறையா? இருமுறையா? இல்லை, பல முறை - பற்பல் முறையாம். இவ்வாறு வள்ளுவர் குறளில் சொல்லவில்லையே! இல்லையில்லை சொல்லியிருக்கிறார். 'பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்னும் தொடரில் 'உள' எனப் பன்மையில் முடித்திருப்பதின் உட்கருத்து இது தான்! 'உளது' என ஒருமையில் சொல்லியிருந்தால் ஒரு முறை நோக்கியதாகக் கொள்ளலாம். 'நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்றதால், காதலர்களிடையே பலமுனை நோக்கங்கள் நடைபெற்றமை புலனாகும். எனவே, இதனை