உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

165


கேணி என்றால், சிமிட்டியால் கட்டப்பட்ட சின்ன (Tank) நீர்நிலைத் தொட்டியா? கீழே தோண்டப்பட்ட சின்ன குளம் - அல்லது - பெரிய கிணறுதான் , கேணி என்பது. அதிலும் பாறையிலோ, கட்டாந்தரையிலோ தோண்டப்பட்ட கேணியா? இல்லை; மணலிலே தோண்டப்பட்ட கேணி. அந்த மணற்கேணியிலே நீர் ஊறச் சொல்லவா வேண்டும்? அதுபோல, உயர்திணையாகிய மாந்தர்க்கு அறிவு ஊறக் கேட்கவா வேண்டும்? - என்று மாந்தர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கியுள்ளார் ஆசிரியர்.

'கற்றனைத் தூறும் அறிவு' என்ற கருத்தின் வாடை, 'தான் கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு' என்னும் ஒளவையின் மூதுரையிலும் வீசுகின்ற தன்றோ?' இந்த நுண்ணறிவைப் பற்றி, ஆங்கில மனநூல் அறிஞரான ஸ்பியர்மன் (Spearman) என்பவர் கூறியுள்ள கருத்துகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை யாகும்.

சாந்துணையுங் கற்க!

(தெளிவுரை) கல்வி யுடையவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகுமாதலாலும், எந்த ஊரும் சொந்த ஊராகுமாகையாலும் ஒருவன் சாகும்வரை அவ்வுயர்ந்த கல்வியைக் கற்காததற்குக் காரணம் என்ன?

"யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு"

(பதவுரை) யாதானும் நாடாமல் - (கற்றவனுக்கு) எந்த நாடும் தன் நாடாகு மாதலானும், (யாதானும்) ஊரா மால் =எந்த ஊரும் தன் ஊராகு மாதலானும், ஒருவன் சாம்துணையும் கல்லாதவாறு என் = (அத்தகைய உயர் வளிக்கும் கல்வியை) ஒருவன் சாகும் வரையும் படிக்காமல் இருப்பது ஏன்?