உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

167


விடுவான். அதுவும் உலகத்தார் தாங்களாகவே படித்தவனை வலியத் தேடியழைத்துச் சிறப்புச் செய்வர். இஃது. அந்தக் காலப் புலவர் பெருமக்களிலிருந்து இந்தக் கால ஆராய்ச்சி வல்லுநர்கள் வரை சாலப் பொருந்தும், அன்று தொட்டு இன்றுவரை உலக வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்உண்மை விளங்கும்.

'யாதானும்' என்றார் ஆசிரியர். அதாவது, செல்லும் இடம், வளமுள்ளதாயினும் அல்லது வறண்ட தாயினும், நல்லோர் வாழ்வதாயினும் அல்லது தீயோர் உறைவதாயினும், தன் அரசனுக்கு நட்புள்ள தாயினும் அல்லது பகையுடையதாயினும் இன்னும் யாதாயினும் சரியே, படித்தவனுக்கு அங்கே சிறப்பான வரவேற்பு உண்டு. இவ்வளவும் உள்ளடக்கியே 'யாதானும்' என்றார். எவரும் முதலில் தம் நாட்டைக் குறிப்பிட்டு, அதன் பிறகே நகரத்தையோ அல்லது அதைச் சார்ந்த சிற்றூரையோ பிறநாட்டாரிடம் தெரிவிப்பது வழக்க மாதலின் நாடாமால் ஊராமால் என நாட்டை முன்னும் ஊரைப் பின்னுமாக அமைத்தார். இவற்றை நாடு ஆம் ஆல் - ஊர் ஆம் ஆல் என்று பிரித்து. ஆல் என்பதைப் பொருளற்ற அசையாக ஒதுக்குவர். அப்படி வேண்டியதில்லை . இந்த 'ஆல்' என்பதற்கு இங்கே 'ஆதலால்' என்பது பொருள், 'படித்தவனுக்கு எதுவும் தன் நாடாதலாலும் தன் ஊராதலாலும் சாகும் வரை படிக்கவேண்டும் என்று வாக்கியம் அமைத்தே பொருள் எழுதவேண்டும். இந்த நுட்பத்தை உணராத பரிமேலழகர் 'ஆல்'கள் இரண்டையும் வெட்டி யெடுத்து விட்டு, அடுத்த வாக்கியத்தோடு இணைப்பதற்காக, இடையே 'இங்ஙன மாயின்' என்ற ஓர் ஒட்டுப் போட்டு ஒட்டியுள்ளார். அவர் உரையை மற்றொருமுறை படித்துப் பாருங்கள். 'மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் முதலிய அனைவருமே இந்த வெட்டுவேலையும்