பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
196
ஆழ்கடலில்
 

பெருங்கடலை நீந்திக்கொண்டே இருக்கவேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது - என இக்குறளுக்குப் பொருள் காணவேண்டும்.

வேண்டாத சொல்லை வருவிப்பதும், இருக்கும் சொல்லை நீக்குவதும் ஆகிய ஒரு பழக்கம் பரிமேலழகரிடம் உண்டு.

"உடையார் முன் இல்லார்போல்"

என்னும் குறளிலும் ஒரு சொல்லை வருவித்து எழுதியுள்ளமை தேவையில்லை என இந்நூலுள் முன் ஓரிடத்தில் விளக்கப்பட்டுள்ளது. மற்றும்,

"அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை"
[1228)

என்னும் குறளில் 'குழல் போலும்' என்பதில் உள்ள 'போலும்' என்பதை அசை எனத் தள்ளிவிட்டார். இக் கருத்துகளையெல்லாம் அறிஞர்கள் ஆய்க.

இறைவனடிகளை வணங்காதவர்கள் வீடுபேறு எய்த இயலாது என்பது இந்தக் குறளின் கருத்தாகும்.